போரடிக்கும் போது புளிப்பு சுவையில் தயிர் வடை செஞ்சு சாப்பிடுங்க...

பின் அவற்றை ஒரு பவுல் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து தயிரில் போடுங்கள்.

போரடிக்கும் போது புளிப்பு சுவையில் தயிர் வடை செஞ்சு சாப்பிடுங்க...
தயிர் வடை
  • Share this:
தயிரின் புளிப்பு சுவையில் ஊற வைத்த வடைகளை சுவைப்பதுதான் தயிர் வடை. இது வட இந்தியாவில் பிரபலமான உணவு என்றாலும் இதன் சுவை அட்டகாசமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உளுந்து - 1/2 கப்


புழுங்கல் அரிசி - 1 tbsp
உப்பு - தே.அ
பெருங்காயத்தூள் - போதுமான அளவுதயிர் - 2 கப்
துருவிய தேங்காய் - 2 tbsp
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 1
எண்ணெய்

தாளிக்க

எண்ணெய் - 1
கடுகு - 1
கறிவேப்பிலை - சிறிதளவு

மேலே தூவ

சீவிய தேங்காய்
காரா பூந்தி
கொத்தமல்லிசெய்முறை :

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வையுங்கள்.

பின் மிக்ஸியில் உளுந்து , அரிசி சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக தயிரை நன்கு அடித்துகொண்டு அதில் தேங்காய், இஞ்சி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை தயிரில் கலந்துகொள்ளுங்கள்.

அடுத்ததாக தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து தயிரில் கொட்டி கலக்குங்கள்.

இரவு உணவுக்கு 'பரங்கிக்காய் அடை' : நொடியில் ரெடியாகும் ரெசிபி

வடைக்கு அரைத்த மாவை கடாயில் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அவற்றை ஒரு பவுல் வெதுவெதுப்பான தண்ணீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரை இறுத்து தயிரில் போடுங்கள்.

தயிரில் மூழ்குமாறு வடைகளை போட்டதும் அதன் மேல் தூவ கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தூவி சாப்பிடுங்கள்.
First published: July 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading