தயிர் இருந்தால் போதும்... இட்லி, தோசைக்கு நொடியில் அசத்தல் சட்னி தயார் - ரெசிபி இதோ...!

தக்காளி தொக்கு சுவையில் இந்த சட்னி சூப்பர் பொருத்தமாக இருக்கும்.

தயிர் இருந்தால் போதும்... இட்லி, தோசைக்கு நொடியில் அசத்தல் சட்னி தயார் - ரெசிபி இதோ...!
சட்னி
  • Share this:
தயிர் பயன்படுத்தி இட்லி , தோசைக்கு நொடியில் எப்படி தக்காளி தொக்கு சுவையில் சட்னி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தயிர் - 1/2 கப்


பெரிய வெங்காயம் - 1
கடுகு - 1 tsp
எண்ணெய் - 1 tbspஉப்பு - தே.அ
மிளகாய் தூள் - 1 tsp
தனியா தூள் - 2 tsp
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
கரம் மசாலா தூள் - 1/2 tspசெய்முறை :

ஃபிரெஷான கெட்டித் தயிர் வாங்கிக்கொள்ளுங்கள். அதை நன்கு கட்டிகள் இல்லாமல் அடித்துக்கொள்ளுங்கள். பின் அதில் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாய் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு போட்டு தாளியுங்கள். பொறிந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள்.

அடுத்ததாக வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வெந்ததும், கரைத்து வைத்துள்ள தயிரை ஊற்றி உடனே கிளறுங்கள்.

போர் அடிக்கும்போது கொறிக்க இனிப்பு சீடை : செய்முறை இதோ

பின் தயிர் இருந்த பாத்திரத்திலேயே கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி சுற்றிலும் ஒட்டியிருக்கும் தயிரை வழித்துவிட்டு கடாயில் ஊற்றுங்கள். அடுத்ததாக தட்டுப்போட்டு மூடி 10 நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள்.

கொதிந்ததும் மூடியை திறந்து பார்க்க தயிர் கெட்டியாகி இருக்கும்.

அதை மேலும் கிளறிக்கொண்டே இருந்தால் தண்ணீர் இறுகி கெட்டியாக வரும். பின் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் சட்னி தயார்.

 

 
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading