முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சட்டென தயாராகும் தயிர் கத்தரிக்காய் கிரேவி : ட்ரை பண்ணுங்க.. இந்த சுவைய மிஸ் பண்ணாதீங்க..

சட்டென தயாராகும் தயிர் கத்தரிக்காய் கிரேவி : ட்ரை பண்ணுங்க.. இந்த சுவைய மிஸ் பண்ணாதீங்க..

தயிர் கத்தரிக்காய் கிரேவி

தயிர் கத்தரிக்காய் கிரேவி

இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தயிர் கத்தரிக்காய் கிரேவி சாதத்திற்கு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இதை சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம். எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 4

எண்ணெய் - 2 tbsp

கடுகு - 1/2 tsp

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - 1

தக்காளி - 2

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 4

தனியா தூள் - 1 tsp

மிளகாய் தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/4 tsp

தயிர் - 1 கப்

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கத்தரிக்காயை சுருங்க வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் அதே எண்ணெயில் கடுகு , கறிவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளுங்கள்.

ஹெல்தியான ஸ்னாக்ஸுக்கு கீரை வடை : எந்த கீரையிலும் செய்யலாம்... அருமையாக இருக்கும்

வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அரைத்த தக்காளி விழுது சேர்த்துக்கொள்ளுங்கள்.

தக்காளி வதங்கியதும் தூள் வகைகளை சேர்த்து வதக்குங்கள்.

பின் தயிர் சேர்த்து வதக்குங்கள். தற்போது வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள்.

கால் கப் தண்ணீர் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் தயிர் கத்தரிக்காய் கிரேவி தயார்.

First published:

Tags: Brinjal export, Recipe