Home /News /lifestyle /

கடையில் தயிர் வாங்குவதை விட வீட்டிலேயே ஃபிரெஷாக தயாரிக்கலாம் : எப்படி செய்வது?

கடையில் தயிர் வாங்குவதை விட வீட்டிலேயே ஃபிரெஷாக தயாரிக்கலாம் : எப்படி செய்வது?

தயிர் சாப்பிடலாம். தயிரில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் காரத்தை குறைத்துவிடும்.

தயிர் சாப்பிடலாம். தயிரில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் காரத்தை குறைத்துவிடும்.

நாளுக்கு நாள் வெயில் வெப்பம் தாக்குகிறது. இந்நிலையில் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வேலைகளை செய்தால்தான் அதற்கு ஈடுகட்ட முடியும்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம்ம் அதிக்கரிக்கிறது. இந்நிலையில் உடலை குளுமையாக வைத்துக்கொள்ளும் வேலைகளை செய்தால்தான் அதற்கு ஈடுகட்ட முடியும். அதற்கு சிறந்த வழி தயிர்.

    தயிரை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    பால் - 1 லிட்டர்
    தயிர் - 1 ஸ்பூன்



    செய்முறை :

    பாலை தண்ணீரே ஊற்றாமல் நன்கு சுண்டக் காய்ச்சிக்கொள்ளுங்கள்.

    காய்ந்ததும் வெப்பம் குறைய காற்றாட விடுங்கள்.

    வெப்பம் முற்றிலும் குறைந்ததும் நுரை வருமாறு 4 -5 முறை ஆற்றுங்கள்.

    அடுத்ததாக அந்த ஒரு ஸ்பூன் தயிரைக் கலந்துவிடுங்கள். ஸ்பூனால் நன்கு கலக்குங்கள்.

    READ: மலச்சிக்கலைப் போக்கும் வாழைத்தண்டு துவையல்..! எப்படி செய்யனும் தெரியுமா..?

    தற்போது அதை சில்வர் பாத்திரத்திலோ அல்லது மண் சட்டியிலோ மாற்றி தட்டு போட்டு மூடிவிடுங்கள்.

    எட்டு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் பால் தயிராக மாறியிருக்கும்.

    இரவு தூங்கும் முன் இந்த வேலையை செய்து விட்டு காலை எழுந்து பார்க்கலாம்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    பார்க்க :

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி