வெள்ளரிக்காய் சாண்ட்விச்..வீட்டில் போர் அடித்தால் சும்மா செஞ்சு சாப்பிடுங்க..!

வெள்ளரிக்காய் சாண்ட்விச்

இந்த சமயத்தில் வெளியே வாங்கி சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியமில்லை. இதுபோன்ற டைம் பாஸ் சாட் வகைகளை வீட்டில் டிரை செய்து சாப்பிடலாம்.

 • Share this:
  வீட்டில் இருப்பதால் அவ்வப்போது எதையாவது கொறிக்கலாமா என வாய் கேட்கும். இந்த சமயத்தில் வெளியே வாங்கி சாப்பிடுவதும் உடலுக்கு ஆரோக்கியமில்லை. அந்த நேரத்தில் இதுபோன்ற டைம் பாஸ் சாட் வகைகளை வீட்டில் டிரை செய்து சாப்பிடலாம். வெள்ளரிக்காய் சாண்ட்விச் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  வெள்ளரிக்காய் - 1
  பிரெட் - 4
  மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
  வெண்ணெய் - 3 ஸ்பூன்
  உப்பு - தே.அ
  பச்சை மிளகாய் - 1  செய்முறை :

  பிரெட்டின் முனைகளை வெட்டி எடுத்துவிடுங்கள். பின் அதன் மேல் வெண்ணெய் தடவுங்கள்.

  வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கொ வெண்ணெய் தடவிய பகுதியின் மே ஒவ்வொன்றாக வைக்கவும்.

  தற்போது அதன் மேல் உப்பு , மிளகுத்தூள் துவுங்கள்.

  ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சமையல் எண்ணெய்க்கும் பங்கு இருக்கிறதா..? சரியானதை தேர்வு செய்வது எப்படி?

  பின் பச்சை மிளகாய் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

  தற்போது அதன் மேல் மற்றொரு வெண்ணெய் தடவிய பிரெட்டை மூடவும்.

  இப்போது அந்த பிரெட்டை அழுத்தி பிடித்து இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டுங்கள். அவ்வளவுதான் வெள்ளரிக்காய் பிளெய்ன் சாண்ட்விச் தயார்.

  டொமேடோ சாஸ் இருந்தால் தொட்டுக்கொள்ளலாம். நன்றாக இருக்கும்.

   

   

   
  Published by:Sivaranjani E
  First published: