வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் கூட்டு..! எப்படி செய்வது?

மதிய உணவுக்கு செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்

வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் கூட்டு..! எப்படி செய்வது?
வெள்ளரிக்காய் கூட்டு
  • Share this:
வெள்ளரிக்காய் அதிக நீர்ச்சத்துக் கொண்டது. இதை கூட்டு போல் மதிய உணவுக்கு செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரி - 1 கப்


எண்ணெய் - 2 ஸ்பூன்
கடலைப் பருப்பு - அரை கப்
தேங்காய் - 2 துண்டுகடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1/4 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பூண்டு - 5 பற்கள்
கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவுசெய்முறை :

கடலைப் பருப்பை குக்கரில் போட்டு 3 விசில் வரும் வரைக் காத்திருக்கவும். மஞ்சள் சேர்த்துக்கொள்ளுங்கள். வெந்ததும் அரைகுறையாக மசித்துக்கொள்ளவும்.

வெள்ளரியை தோல் நீக்கிக் கொள்ளவும்.

தேங்காய் , சீரகம் மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொறிந்ததும் , பூண்டை தட்டிப் போடவும். அடுத்து வெள்ளரிக்காய் போட்டு வதக்கி உடனே மசித்த பருப்பைக் கொட்டி கொதிக்கவிடவும்.

அதில் அரைத்த தேங்காயையும் கொட்டிக் கிளறவும்.

நன்குக் கொதிக்கவிடுங்கள். வெள்ளரிக்காயை கரண்டி கொண்டு சற்று மசித்து விடவும். தண்ணீர் சற்று இறுகி கூட்டு பதம் வந்ததும் இறக்கிவிடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , கருவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து ஊற்றவும். அவ்வளவுதான் வெள்ளரிக்காய் கூட்டு தயார்.

 
First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்