தொண்டைக்கு ஜில்லென இருக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்..! எப்படி செய்வது..?

வெள்ளரிக்காயில் சாலட், கூட்டு, குழம்பு என சாப்பிட்டு போரடித்தால் இப்படி வெள்ளரிக்காயில் ஜூஸ் போட்டுக் குடிப்பது வித்தியாசமான சுவையாக இருக்கும்.

தொண்டைக்கு ஜில்லென இருக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்..! எப்படி செய்வது..?
வெள்ளரிக்காய் ஜூஸ்..!
  • Share this:
வெள்ளரிக்காய் வெயில் காலத்தில் தவிரிக்க முடியாத ஒன்று. உடலைக் குளுமைப்படுத்தும் காய்களில் வெள்ளரிக்கும் முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் வெள்ளரிக்காயில் சாலட், கூட்டு, குழம்பு என சாப்பிட்டு போரடித்தால் இப்படி வெள்ளரிக்காயில் ஜூஸ் போட்டுக் குடிப்பது வித்தியாசமான சுவையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் : 2 கப்


புதினா - 8 இலைகள்
தண்ணீர் - 3 கப்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்உப்பு - 1/4 ஸ்பூன்
சர்க்கரை - தேவைக்கு ஏற்ப
மிளகு - 1/4 ஸ்பூன்
ஐஸ் கட்டிகள்செய்முறை :

வெள்ளரித்தோலை நீங்கிவிட்டு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

ஜாரில் வெள்ளரிக்காய், உப்பு, சர்க்கரை, புதினா, மிளகு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக்கொள்ளுங்கள்.

பின் வடிகட்டி தண்ணீரை மட்டும் எடுங்கள். அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துகொள்ளுங்கள். இறுதியாக அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்து பருகுங்கள்.

சுவையான வெள்ளரிக்காய் ஜூஸ் தயார்.

படிக்க :

வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் கூட்டு..! எப்படி செய்வது?
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்