• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மொறு மொறு சுவையில் உருளைக்கிழங்கு சிப்ஸ்..! வீட்டிலேயே செய்ய இதோ டிப்ஸ்..!

மொறு மொறு சுவையில் உருளைக்கிழங்கு சிப்ஸ்..! வீட்டிலேயே செய்ய இதோ டிப்ஸ்..!

சிப்ஸ் வகைகள் : காற்று அடைபட்ட சிப்ச் வகைகள் தலைவலியை உண்டாக்கும். உருளைக்கிழங்கு போன்ற தாவர வகைகளில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் அவை அமினோ ஆசிடை வெளியிடுகின்அன. அவை மோனோசோடியம் குளுடமேட் ஆக உருவாவதால் தலைவலி , வாந்தியை உண்டாக்கும்.

சிப்ஸ் வகைகள் : காற்று அடைபட்ட சிப்ச் வகைகள் தலைவலியை உண்டாக்கும். உருளைக்கிழங்கு போன்ற தாவர வகைகளில் கெமிக்கல்கள் பயன்படுத்துவதால் அவை அமினோ ஆசிடை வெளியிடுகின்அன. அவை மோனோசோடியம் குளுடமேட் ஆக உருவாவதால் தலைவலி , வாந்தியை உண்டாக்கும்.

  • Share this:
    வீட்டில் இருக்கும்போது ஏதாவது கொறிக்க வேண்டும் என வாய் தேடும்.. அப்படி தேடும்போது வீட்டில் உருளைக்கிழங்கு இருந்தால், சிப்ஸ் செய்து சாப்பிடுங்க.. 

    தேவையான பொருட்கள்

    உருளைக்கிழங்கு - 5
    உப்பு - 1 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - பொறிக்க



    செய்முறை :

    உருளைக் கிழங்குகளை தோல் சீவிக்கொள்ளுங்கள். பின் உருளைக்கிழங்களை சீவ சீவல் கருவி பயன்படுத்தி மெல்லியதாக சீவிக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக அதை தண்ணீரில் இரண்டு முறை அலசுங்கள்.

    பின் காற்றோட்டமாக துணி விரித்து உருளைக்கிழங்குகளை ஒட்டாமல் காய வைய்யுங்கள். ஈரம் போனதும் எடுத்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக உப்பு ஒரு ஸ்பூன் மற்றும் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து கரைத்துக்கொள்ளுங்கள்.

    காரசார சுவையில் முட்டை போட்டி ஃபிரை..! செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி?

    கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் நன்குக் காய வேண்டும். காய்ந்ததும் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போடுங்கள்.

    அடுத்ததாக கலக்கி வைத்துள்ள உப்பு தண்ணீர் கொஞ்சம் எண்ணெய்யிலேயே சுற்றி ஊற்றுங்கள். எண்ணெய் தெரிக்காதவாறு தள்ளி நின்று ஊற்றுங்கள். இது சிப்ஸில் உப்பு ஏறவே இந்த ஸ்டெப்

    அடுத்ததாக சீவல் நன்கு மொறு மொறுவென வரும் வரை பொறித்துகொண்டே இருங்கள். க்ரிஸ்பியாக வந்ததும் எடுத்துவிடுங்கள்.

    இப்படி எல்லாவற்றையும் செய்ததும் பெரிய பவுலில் போட்டு மிளகாய் தூள் தூவி குளுக்குங்கள். தேவைப்பட்டால் பெருங்காயத்தூளும் போடலாம்.

    அவ்வளவுதான் மொறு மொறு உருளைக்கிழங்கு சிப்ஸ் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: