Home /News /lifestyle /

Cold Coffee இப்படி தான் செய்யனுமா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே... 2 நிமிடத்தில் செய்யலாம்..!

Cold Coffee இப்படி தான் செய்யனுமா..? இத்தனை நாள் இது தெரியாம போச்சே... 2 நிமிடத்தில் செய்யலாம்..!

கோல்ட் காஃபி

கோல்ட் காஃபி

பொதுவாகவே காஃபி பிரியராக இருக்கும் பலருக்கும் கோல்ட் காஃபி (Cold Coffee) பிடிக்கும். குறிப்பாக காஃபியின் மணத்தை ரசிப்பவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.

சிலர் ஜூஸ் கடை அல்லது சாட் கடைகளுக்கு போனாலே அவர்கள் யோசிக்காமல், மெனு கார்டை பார்க்காமல் ஆர்டர் செய்வது கோல்ட் காஃபிதான். பொதுவாகவே காஃபி பிரியராக இருக்கும் பலருக்கும் கோல்ட் காஃபி (Cold Coffee) பிடிக்கும். குறிப்பாக காஃபியின் மணத்தை ரசிப்பவர்களுக்கு இது நிச்சயம் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் இனி கடைக்கு போனால்தான் கோல்ட் காஃபி குடிக்க வேண்டும் என்றில்லை. மிக மிக எளிமையான முறையில் வீட்டில் நீங்களே செய்து குடிக்க ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள் :

கஃபி பொடி - 2 Tbsp
சர்க்கரை - 3 Tbsp
ஐஸ் தூள் - தே.அ
குளிர்ந்த பால் - 1 கிளாஸ்
சாக்லெட் சிரப் - 1 Tsp ( தேவைப்பட்டால் )



 

செய்முறை

காஃபி பொடி மற்றும் சர்க்கரையை மிக்ஸி சாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். தூளாக அரைத்ததும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரையுங்கள்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக அரைத்துவிட்டு மூடியை திறந்து ஸ்பூனால் உட்புறமாக தள்ளிவிட்டு தள்ளிவிட்டு அரைக்கவும். மையோனைஸ் தயார் செய்வது போல் அரைக்க வேண்டும்.

நன்கு அரைத்துவிட்டீர்கள் எனில் அதன் நிறம் அடர் பிரவுன் நிறத்திலிருந்து வெளிறிய பிரவுன் நிறத்திற்கு மாறியிருக்கும். அப்போது மிக்ஸியிலிருந்து எடுத்துவிடுங்கள்.

கருப்பு ஜூஸில் மறைத்திருக்கும் அற்புதமான 11 நன்மைகள் : என்னென்ன தெரியுமா..?

இப்போது ஒரு கண்ணாடி கிளாசில் சாக்லெட் சிரப்பை ஓரங்களை சுற்றி ஊற்றுங்கள்.

பின் ஐஸ் தூளை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் அரைத்த காஃபி சிரப் 2 ஸ்பூன் அதில் போடுங்கள்.

பின் குளிர்ந்த பாலை அதில் ஊற்றி மீண்டும் ஒரு ஸ்பூன் காஃபி சிரப் போட்டு அதன் மேல் காஃபி தூளை தூவுங்கள். தேவைப்பட்டால் ஒரு ஸ்கூப் சாக்லெட் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட்ஸ் தூவி சாப்பிடலாம்.

அவ்வளவுதான் உங்களுடைய ஃபேவரெட் கோல்ட் காஃபி ரெடி...

 

 

 

 

 

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Coffee

அடுத்த செய்தி