தேங்காய் பால் ரசம்... கேட்கும் போதே வித்தியாசமா இருக்கா..? சுவையும் அப்படிதான் இருக்கும் செஞ்சு பாருங்க

பின் பூண்டுப் பற்களை இடித்துப் போட்டு வதக்குங்கள். அதோடு கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டு வதக்குங்கள்.

தேங்காய் பால் ரசம்... கேட்கும் போதே வித்தியாசமா இருக்கா..? சுவையும் அப்படிதான் இருக்கும் செஞ்சு பாருங்க
தேங்காய் பால் ரசம்
  • Share this:
எப்போதும் அலுத்துப்போன குழம்புகளை செய்து நாக்கு செத்து போச்சா... இப்படி அப்பப்போ வித்தியாசமான உணவுகளை சமைக்க டிரை பண்ணுங்க... அதுக்கு இப்போ தேங்காய் பால் ரசம் எப்படி செய்யுறது பாக்கலாம்.

தேவையான பொருட்கள்

கெட்டி தேங்காய் பால் - 1 கப்


தண்ணீர் கலந்த தேங்காய் பால் - 2 கப்
காய்ந்த மிளகாய் - 4
புளி - எலுமிச்சை அளவுஉப்பு - தே. அளவு
பூண்டு - 7 பற்கள்
கடுகு - 1 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் -1/2 ஸ்பூன்செய்முறை :

முதலில் புளியை தண்ணீர் கலந்த தேங்காய் பாலில் ஊற வைத்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொறிக்க விடுங்கள். பின் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

பின் பூண்டுப் பற்களை இடித்துப் போட்டு வதக்குங்கள். அதோடு கறிவேப்பிலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டு வதக்குங்கள்.

தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிநிலை அடங்கியதும் கெட்டி தேங்காய் பாலை ஊற்றுங்கள்.

கொதிக்கும் போதே ஊற்றாதீர்கள். இல்லையெனில் தேங்காய் திரிந்து வரும். அவ்வளவுதான் தேங்காய் பால் ரசம் ரெடி


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading