Chithra Pournami Special Recipe | தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?
Chithra Pournami Special Recipe | தேங்காய் பால் பாயாசம் செய்வது எப்படி தெரியுமா?
தேங்காய் பால் பாயாசம்
Chithra Pournami Special Recipe | தேங்காய் பால் பாயாசம் செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும்பிடிக்கும். இன்று இந்த பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம்...
தேங்காய் பால் பாயாசம் செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். சித்ரா பெளர்ணமிக்கு இந்த பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒன்று (பெரியது)
பச்சரிசி - அரை ஆழாக்கு
ஏலக்காய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
வெல்லம் - கால் கிலோ
காய்ந்த திராட்சை - 10 கிராம்
முந்திரி - 10 கிராம்
செய்முறை:
சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்து கொள்ளவும். தேங்காயில் மூன்று முறை பாலெடுத்து தனித்தனியே வைத்து கொள்ளவும். மூன்றாவது தேங்காய்ப்பாலை கொதிக்க வைத்து அரிசி கழுவி வேக விடவும்.
நன்கு வெந்ததும் வெல்லத்தை சிறிது தண்ணீர் தெளித்து கரையவிட்டு வெந்த அரிசியில் கொட்டவும். கொதித்ததும் இரண்டாவது பாலை ஊற்றி முந்திரி, திராட்சை, ஏலக்காய்ப்பொடி போட்டு முதல் பாலை ஊற்றி கொதி வந்தவுடன் இறக்கவும். சுவையான தேங்காய் பால் பாயாசம் தயார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.