• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தீபாவளி ஸ்பபெஷல்: தேங்காய் பர்பி செய்ய ரெசிபி

தீபாவளி ஸ்பபெஷல்: தேங்காய் பர்பி செய்ய ரெசிபி

தேங்காய் பர்பி

தேங்காய் பர்பி

தேங்காய் மிட்டாயை அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும். 

  • Share this:
பொதுவாக நம் பள்ளி நாட்களில் பெட்டி கடைகளில் அதிகம் வாங்கி உண்ட தின்பண்டங்களில் இந்த தேங்காய் மிட்டாயும் ஒன்றாகும். அதிலும் தென் மாவட்டங்களில் இந்த தேங்காய் பர்பியை தீபாவளிக்கு செய்யாமல் இருக்க மாட்டார்கள். இந்த தேங்காய் ஸ்வீட்டை தேங்காய் பர்பி என்றும் தேங்காய் மிட்டாய் என்றும் சொல்லுவார்கள்...

தேவையான பொருட்கள்:

தேங்காய் துருவல் - 1 கப் (துருவியது)

சர்க்கரை - 1 கப்

ஏலக்காய் - 4 (பொடித்தது)

முந்திரி, பாதாம் - தலா 1 தேக்கரண்டி (பொடியாக்கியது)

நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேங்காய்த் துருவலை லேசாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும். அரை கப் தண்ணீரில் சர்க்கரையைக் கொட்டி அடுப்பில் வைத்து கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.
பதம் வந்ததும் தேங்காய்த் துருவலைக் கொட்டி கிளறவும். நன்றாக கிளறி கெட்டி பதம் வந்ததும், வாணலியில் ஒட்டாமல் வரும் போது, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

ஒரு தட்டில் நெய் தடவி, தேங்காய் கலவையை அதில் கொட்டி பரப்பி ஆற வைக்கவும். ஒரு தேக்கரண்டி நெய்யில் சீவிய முந்திரி, பாதாமை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டிய தேங்காய் கலவையில் கொட்டி லேசாக அழுத்தி விடவும். லேசாக சூடு ஆறியதும் கத்தியால் விருப்பமான வடிவில் வில்லைகளாக போட்டு நன்கு ஆற விடவும்.

குறிப்பு: அடுப்பில் தொடர்ச்சியாக விடாமல் கிளற வேண்டும் இல்லையெனில் அடிபிடித்துவிடும்.

சர்க்கரைக்கு பதில் வெல்லம் போட்டும் தேங்காய் மிட்டாய் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் மிட்டாய் பிரவுன் கலரில் வரும்.

மேலும் படிக்க... இதய நோயை தடுக்க இந்த ஜூஸை குடியுங்கள்!

பற்களும், ஈறுகளும் வலுப்பெற வேண்டுமா?... அப்போ இதை குடியுங்கள்...             

தேநீர் குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் உள்ளது தெரியுமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: