மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் தேங்காய் பர்ஃபி - எளிமையாக ரெசிபி இதோ...

தேங்காய் பர்ஃபி

தேங்காய் மற்றும் பாலுடன் ரவை சேர்த்து சாப்பிடும் போது, நாவில் அதன் சுவை காட்டாயம் ஒட்டிக்கொள்ளும்.

  • Share this:
உங்கள் இனிமையான பசிக்குத் தகுந்த சரியான இனிப்பு என்றால் அது தேங்காய் ரவை பர்ஃபி தான். வெறும் ரவை, தேங்காய், சர்க்கரை மற்றும் பால் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த ஸ்வீட் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு சூப்பர் ஈஸி ஸ்வீட் ரெசிபி ஆகும். முக்கியமாக இந்த இனிப்பு வகை ராம் நவமி போன்ற விஷேச காலங்களில் செய்யப்படுகிறது.

தேங்காய் மற்றும் பாலுடன் ரவை சேர்த்து சாப்பிடும் போது, நாவில் அதன் சுவை காட்டாயம் ஒட்டிக்கொள்ளும். மேலும் இந்த இனிப்பை மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும். தேங்காயில், இரும்பு, வைட்டமின்கள் பி 6, தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிரம்பியுள்ளன. ரவா தேங்காய் பர்ஃபி செய்யும் எளிதான செய்முறையை பற்றி பின்வருமாறு காணலாம்.

தேவையான பொருட்கள்:

ரவை - 21/2 கப்
துருவிய தேங்காய் - 11/4 கப்
நெய் - 3 தேக்கரண்டி
சர்க்கரைத்தூள் - 21/2 கப்
பால் - 33/4 கப்
உலர்ந்த பழங்கள் - 1/4 கப்.



செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ரவை சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வறுக்கவும்.

2. ரவை வண்ணம் மாற தொடங்கியதும் அதில் துருவிய தேங்காயைச் சேர்க்கவும். கலவையை 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும். இப்போது அடுப்பை அனைத்து கலவையை தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

3. மற்றொரு கடாயில் தேவையான அளவு பால் ஊற்றி ஒரு கொதி நிலைக்கு வரும் வரை சூடாக்க வேண்டும்.

4. பால் கொதித்ததும் அதில் தேங்காய் ரவை கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள சர்க்கரைத்தூளை சேர்த்து முழுமையாக கரையும் வரை கலக்கவும்.

5. பால் முழுவதுமாக உறிஞ்சப்பட்டு ஒரு தடிமனான கலவை உருவாகும் வரை மிதமான வெப்பத்தில் அடிபிடிக்காதவாறு கிளறிவிட வேண்டும். மேலும் இந்த கலவையுடன் உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

எந்த வகை மாம்பழம் அதிக சுவை மிக்கது? ட்விட்டரில் விவாதம் நடத்திய மாம்பழ பிரியர்கள்! ட்ரெண்டாகும் #Mangowar ஹாஷ்டாக்

6. கலவையானது கடாயில் ஒட்டாமல் பிரிந்து வருவதை காணலாம். இப்போது அடுப்பை அனைத்துக் கொள்ளுங்கள்.

7. புதியதாக ஒரு தட்டு எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் நெய்தடவி சூடான தேங்காய் ரவை கலவையை பரப்பவும். அதை சமமாக பரப்பி, சூடாக இருக்கும் போதே வேண்டிய விதத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும்.

8. சிறிதுநேரம் குளிர வைத்தவுடன் கலவை இறுகிவிடும். அவ்வளவு தான் பர்ஃபி தயார்.

 
Published by:Sivaranjani E
First published: