• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உடல் எடை பிரச்சனை , நீரிழிவு நோய் இருந்தால் சோளம் ரொட்டி செஞ்சு சாப்பிடுங்க...!

உடல் எடை பிரச்சனை , நீரிழிவு நோய் இருந்தால் சோளம் ரொட்டி செஞ்சு சாப்பிடுங்க...!

சோள ரொட்டி

சோள ரொட்டி

ஆயுர்வேதத்தில் சோளம் கொழுப்பை கரைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதாலேயே இது சிறந்த உணவாக இருக்கிறது.

  • Share this:
சோள விதைகள் பசையம் இல்லாத தானியமாகும். இதன் எளிதில் செரிமானிக்கக் கூடிய ஆற்றலாது உடலுக்கு எண்ணற்ற வகைகளில் நன்மை சேர்க்கிறது. இனிப்பு , துவர்ப்பு சுவையை கொங்ட இது காலை அல்லது இரவு உணவுக்கு பொருத்தமாக இருக்கும். ஆயுர்வேத முறையில் சோள உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏனெனில் ஆயுர்வேதத்தில் சோளம் கொழுப்பை கரைக்கவும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதாலேயே இது சிறந்த உணவாக இருக்கிறது. இதில் சோள ரொட்டி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சோளம் மாவு - 1/2 கப்
தண்ணீர் - 1/2 கப்
உப்பு - தே.அ
நெய் - தே.அ



செய்முறை :

தண்ணீரை முதலில் சூடேற்றிக்கொள்ளுங்கள்.

தண்ணீர் சற்று மிதமான சூட்டில் இருக்கும்போது அதை மாவில் ஊற்றிக்கொள்ளுங்கள். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.

புரோட்டீன் முழுமையாக கிடைக்க முட்டையை எப்போதும் இப்படித்தான் சாப்பிட வேண்டுமாம்… ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்..!

அடுத்ததாக எப்போதும்போல் சப்பாத்தி கல்லில் உருட்டி எடுத்துக்கொள்ளுங்கள். உருட்டை முடியவில்லை எனில் அடை போல் கை விரல்களாலேயே தட்டி கல்லில் போடுங்கள்.

பின் தோசைக்கல்லில் போட்டு நெய் ஊற்றி சுட்டு எடுங்கள்.

அவ்வளவுதான் சோள மாவு தோசை தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: