சாக்லெட் வால்நட் பிரவுனி வீட்டிலேயே செய்வது எப்படி ?

காட்சி படம்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் பிரவுனியை வீட்டிலேயே இப்படி செய்து சாப்பிடுங்கள்..

  • Share this:
    கொரோனா லாக்டவுனில் மக் கேக்ஸ் மிகவும் டிரெண்டானது. அந்த வகையில் பலரும் விரும்பு சாக்லெட் வால்நட் பிரவுனி மக்கில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    சாக்லெட் - 2 tbsp
    வெண்ணெய் - 2 tbsp
    சர்க்கரை பவுடர் - 2 tbsp
    மைதா - 2 tbsp
    கோகோ பவுடர் - 1 tbsp
    பேக்கிங் பவுடர் - 1/4 tsp
    வால்நட் - தே.அ

    செய்முறை :

    மக்கில் வெண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பின் அதில் உடைத்த சாக்லெட்டுகளை சேர்த்து மைக்ரோவேவில் 15 நொடிகள் வைக்கவும்.

    15 நொடிகள் கழித்து சர்க்கரை பவுடர் , மைதா, கோகோ பவுடர் , பேக்கிங் பவுடர் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அனைத்தையும் மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

    இறுதியாக வால்நட்ஸை தூவுங்கள். பின் சாக்லெட்டை சீவி அதையும் தூவுங்கள்.

    Also read : எந்தெந்த காய்கறிகளில் புரதச்சத்து அதிகமாக உள்ளது ..? தெரிஞ்சிக்கோங்க..

    அதை அப்படியே மைக்ரோவேவில் வைத்து 1 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

    1 நிமிடம் கழித்துப் பார்த்தால் அட்டகாசமான சாக்லெட் வால்நட் பிரவுனி தயார்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: