வெயிலுக்கு இதமான குளிர்ச்சி தரும் சாக்லேட் குல்பி... வீட்டிலேயே எப்படி செய்யலாம்!

வெயிலுக்கு இதமான குளிர்ச்சி தரும் சாக்லேட் குல்பி... வீட்டிலேயே எப்படி செய்யலாம்!

குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குல்பியில் சாக்லேட் குல்பி என்றால் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும்

குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குல்பியில் சாக்லேட் குல்பி என்றால் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும்

  • Share this:
குல்பி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வெயில் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குல்பியை விரும்பி சாப்பிடுவர். குல்பியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதிலும் குல்பியில் சாக்லேட் குல்பி என்றால் அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும். இந்த குல்பி முழுக்க முழுக்க சாக்லெட்டால் செய்யப்படுகிறது. மேலும் இதனை வீட்டிலேயே நீங்கள் மிக எளிதாக செய்யலாம்.

இந்த செயல்முறையில் குல்பியை குறைந்தது 6-8 மணிநேரங்களுக்கு குளிர்சாதன பெட்டியில் உறைய வைக்க வேண்டும். மேலும் இதில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவதன் மூலம் குல்பி சாப்பிடுவதை ஆரோக்கியமானதாக மாற்றலாம். எனவே, இந்த செய்முறையை பின்பற்றி வீட்டிலேயே குல்பி தயாரித்து பாருங்கள்.

குல்பி தயாரிக்க தேவையான பொருட்கள்:

பால் - 4 கப்
பால் பவுடர் - 3 தேக்கரண்டி
சர்க்கரை - 1/2 கப்
பிரஷ் கிரீம் - 2 கப்
கோகோ பவுடர் - 3 டீஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் - 6 டீஸ்பூன்செய்முறை:

1. ஒரு கடாயில், பால், பிரஷ் கிரீம் மற்றும் பால் பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவை ஒரு கொதி நிலைக்கு வரும் வரை சூடேற்றவும். பின்னர் 10 நிமிடங்கள் குறைந்த தீயில் சூடுபடுத்தவும்.

2. இப்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி மற்றொரு 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

3. இப்போது பால் கிரீமியாக மாறியதும், சோகோ சிப்ஸ் மற்றும் கோகோ பவுடர் ஆகியவற்றை சேர்க்கவும்.

4. சாக்லேட் கரையும்வரை நன்கு கலக்கவும். இறுதியாக அடுப்பை அனைத்துவிட்டு கலவையை சிறிது குளிர்விக்க வேண்டும்.

5. பின்னர் குல்பி அச்சுகளில் கலவையை ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்க வேண்டும். சுமார் 6 முதல் 8 மணி நேரம் குளிர்விக்க வேண்டும்.

6. அச்சுகளில் கலவை சரியாக உறைந்ததும் அவற்றில் இருந்து குல்பியை வெளியே எடுத்து பரிமாறலாம்.

இது தவிர மக்கள் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய மலாய் குல்பியை கூட நீங்கள் வீட்டிலேயே செய்து அசத்தலாம்.

மலாய் குல்பி தயாரிக்க தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்
கார்ன் ஃபிளார் - 50 கிராம்
சர்க்கரை - 1 கப்
கிரீம் - 1 கப்
ரோஸ் எசென்ஸ் - 6 துளி
ஏலக்காய் பொடி - சிறிதளவு
முந்திரி, பாதாம், பிஸ்தா - விருப்பப்படி.செய்முறை :

1.முந்திரி, பாதாம், பிஸ்தாயை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2.பாலை காய்ச்சி பாதியளவு பாலை எடுத்து அதில் கார்ன் ஃபிளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.

3.மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

4.இந்த இரு பால் கரைசலையும் ஒன்றாக கலந்து மிக்சியில் போட்டு அடிக்கவும்.

Mint Juice Recipe : கோடைகாலத்தில் புதினா ஜூஸ் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்!

5.அரைத்த விழுதுடன் கிரீம், ரோஸ் எசன்ஸ், ஏலக்காய் தூள், முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து குல்பி அச்சுகளில் நிரப்பி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

6. 6 மணி நேரம் கழித்து கலவை உறைந்ததும் எடுத்து பரிமாறலாம்.

 
Published by:Sivaranjani E
First published: