காரசாரமான சுவையில் பச்சை மிளகாய் குருமா - இதோ ரெசிபி..!

செய்து சாப்பிட்டுப் பாருங்கள். காரசாரமான சுவையில் அருமையாக இருக்கும்.

காரசாரமான சுவையில் பச்சை மிளகாய் குருமா - இதோ ரெசிபி..!
பச்சை மிளகாய் குருமா
  • Share this:
காய்கறிகள் சேர்த்து குருமா செய்து சாப்பிட்டுருப்பீர்கள். ஆனால் பச்சை மிளகாயில் குருமா வெச்சிருக்கீங்களா..? செய்து சாப்பிட்டுப் பாருங்கள். காரசாரமான சுவையில் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

பஜ்ஜி மிளகாய் - 1/4 கிலோ


வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள் - 1/4 tspகொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 1 tsp

அரைக்க

இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பற்கள்
கொத்தமல்லி தண்டுடன் - கையளவு

2 முறை அரைக்க :

தேங்காய் - 1/4 கப்
முந்திரி - 5
கசகசா - 1 tspசெய்முறை :

முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். கண்ணாடி பதம் வந்ததும் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.

தக்காளி குழைந்ததும் நறுக்கிய பஜ்ஜி மிளகாயை சேர்த்துக்கொள்ளுங்கள். பின் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றுங்கள்.

உடலுக்கு ஊட்டச்சத்து தரும் மொச்சைக் கொட்டை கூட்டு - எப்படி செய்வது..?

மிளகாய் நன்கு வேகும் வரை கொதிக்க வையுங்கள். அடுத்ததாக அரைத்த விழுதுகளையெல்லாம் சேர்த்து கொதிக்க வையுங்கள்.

குழம்பு கெட்டிப் பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

குருமா தயார்.

 

 

 

 
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading