சூப்பரான மொறுமொறு பேபி கார்ன் சில்லி.. குழந்தைகளுக்கு கட்டாயம் பிடிக்கும்!

பேபி கார்ன் சில்லி

ஒருமுறை சுவைத்து விட்டால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அதன் ருசி நாவில் ஒட்டிக்கொள்ளும்.

  • Share this:
தினமும் குழந்தைகளுக்கு பிடித்தமாதிரி எதாவது தின்பண்டங்களை செய்ய நினைக்கிறீர்களா? அதிலும் அவை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அம்மாக்களுக்கு இந்த சில்லி பேபி கார்ன் ரெசிபி காட்டாயம் உதவியாக இருக்கும். இந்த ரெசிபி செய்ய 35 நிமிடங்கள் ஆகும்.

ஆனாலும், ஒருமுறை சுவைத்து விட்டால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அதன் ருசி நாவில் ஒட்டிக்கொள்ளும். இந்த ரெசிபியை பிறந்தநாள் பார்ட்டி, விருந்தினர் வருகை மற்றும் சில குடும்ப நிகழ்ச்சிகளில் செய்யலாம். காரசாரமான சுவை கொண்ட இந்த ரெசிபி ஒருவரின் வயிற்றை முழுமையானதாக வைக்க உதவுகிறது. சரி இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதைக் காணலாம்.

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் - 2 கப்
வெங்காயம் - 4
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - 6 தேக்கரண்டி
பச்சை கேப்சிகம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையானஅளவு
பச்சை மிளகாய் - 2
ஸ்ப்ரிங் ஆனியன் - 2 தேக்கரண்டி

மாவு பேட்டர் தயாரிக்க:

சோள மாவு - 1 1/2 கப்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்செய்முறை:

* முதலில் பேபி கார்னை உங்களுக்கு விருப்பனமான முறையில் வெட்டி அதனை கழுவி எடுத்துக்கொள்ளவும்.

* அதன் பிறகு, வெஜிடபிள் கட்டர் அல்லது கத்தி ஆகியவற்றை கொண்டு வெங்காயம், பச்சை மிளகாய், கேப்சிகம் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

* இப்பொது ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் மிளகாய் தூள், கருப்பு மிளகு தூள், ஒரு சிட்டிகை உப்பு, சோள மாவு சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கி பஜ்ஜி மாவு பதத்திற்கு ஒரு பேட்டரை தயார் செய்யுங்கள்.

* இந்த பேட்டரில் பேபி சோளங்களை நனைத்து வைத்து தனியாக எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.

* அதேசமயம், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும், பேட்டரில் தோய்த்து வைத்த பேபி கார்னை பொரித்து வைக்கவும்.

* மறுபுறம், மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் சீரகம் சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.

சுவையான சப்பாத்தி சாண்ட்விச் : இப்படி குழந்தைகளுக்குப் பிடித்த புதுவித ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க..

* அதன்பின்னர், நறுக்கிய வெங்காயம் மற்றும் கேப்சிகம், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு முறை கிளறி, ஒரு மூடியால் கடாயை மூடி வைக்கவும். கேப்சிகம் மற்றும் வெங்காயத்தை 10-15 நிமிடங்கள் சமைக்கவும்.

* இப்போது, ​​அதனுடன் வறுத்து வைத்த பேபி கார்ன் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் சமைக்கவும்.

* அவ்வளவுதான் பேபி கார்ன் சில்லி ரெடி, இதனை ஒரு பவுலில் மாற்றி அதன் மேல் நறுக்கிய ஸ்ப்ரிங் ஆனியனை தூவி விட்டு அலங்கரிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: