சிக்கன் பிரைடு ரைஸ்!

சிக்கன் பிரைடு ரைஸ்

சிக்கன் பிரைடு ரைஸ்

சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

  • Share this:
சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. சைனீஸ் உணவில் ஒன்றான சிக்கன் பிரைடு ரைஸ் எவ்வாறு வீட்டிலேயே செய்வது என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி – 1 கப்

வெங்காயம் – 1 கப்

எலும்பு இல்லாத கோழி - 1/2கப்

கேரட் – 1

பீன்ஸ் – 15

வெங்காய தாள் – 1

குடைமிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைகரண்டி

முட்டை -3

சில்லி சாஸ் – 1 மேஜைகரண்டி

சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி

மிளகு தூள்-1 மேசைக்கரண்டி

நெய் – 1/4 கப்

உப்பு – தேவையான அளவுசெய்முறை

குடைமிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். பீன்ஸ், வெங்காயத்தாளை கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். சாதம் உதிர் உதிரக வடித்து ஆற வைத்து கொள்ளவும். அத்துடன் கோழி கழுவிச் சுத்தம் செய்து கொண்டு, உப்பு சேர்த்து தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். அடுத்து அதில் சிறிது வெங்காயத்தாளையும் வதக்கிக் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி கொள்ளவும். அதன் பின் காய்கறிகளைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். பின் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

மேலும் படிக்க... தந்தூரி சிக்கன் வீட்டிலேயே சுலபமாக செய்ய ரெசிபி...

கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுதூள் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். காய்கறி பாதி வெந்தவுடன் ஆற வைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும். இப்போது சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் ரெடி.

மேலும் படிக்க... சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: