மதிய உணவுக்கு அசத்தலாக இருக்கும் கொண்டைக்கடலை தேங்காய்பால் கிரேவி..! ரெசிபி இதோ...

கொண்டைக்கடலை தேங்காய்பால் கிரேவி

தேங்காய் பால் சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். எனவே நீங்களும் ஒரு நாள் டிரை பண்ணி சாப்பிட்டுப் பாருங்கள்.

 • Share this:
  கொண்டைக்கடலை தேங்காய்பால் கிரேவி எளிமையான முறையில் சமைக்கப்படும் அருமையான உணவாகும். இதை சப்பாத்தி, சாதம் என அனைத்திற்கும் சாப்பிடலாம். தேங்காய் பால் சேர்ப்பதால் இதன் சுவை தனித்துவமாக இருக்கும். எனவே நீங்களும் ஒரு நாள் டிரை பண்ணி சாப்பிட்டுப் பாருங்கள். சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது.

  தேவையான பொருட்கள்

  கொண்டைக்கடலை
  வெங்காயம் - 1
  இஞ்சி - 1 துண்டு
  பூண்டு - 4
  தக்காளி கரைத்தது - 1/2 கப்
  தேங்காய் பால் - 1/4 கப்
  மஞ்சள் பொடி - 1/2 tsp
  மிளகாய் தூள் - 1 tsp
  சீரகத்தூள் - 1 tsp
  தனியா தூள் - 1 tsp
  கரம் மசாலா - 1 tsp
  சாட் மசாலா - 1 tsp
  நெய் - 1 tsp
  உப்பு - தே.அ  செய்முறை :

  கொண்டைக் கடலையை இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிடுங்கள். பின் மறுநாள் காலை அதை குக்கரில் போட்டு உப்பு கொஞ்சம் சேர்த்து 5 விசில் வர வேக வையுங்கள்.

  பின் தேங்காயிலிருந்து பால் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

  கடாய் வைத்து காய்ந்ததும் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  பின் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தேங்காய் பால் சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு கொடுக்கப்பட்டுள்ள பொடிகளையும் சேர்த்து வதக்குங்கள்.

  ரைஸ் பிரான் ஆயில்தான் உங்கள் சமையலில் அதிகம் பயன்படுத்துகிறீர்களா..? அதன் நன்மை , தீமைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

  உப்பு தே.அ சேருங்கள். அடுத்ததாக வேக வைத்த கொண்டைக் கடலையை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு மூடி , சிறு தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

  இறுதியாக தண்ணீர் வற்றி கிரேவி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவுங்கள். அவ்வளவுதான் கொண்டைக்கடலை தேங்காய் பால் கிரேவி தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: