Home /News /lifestyle /

ஆரோக்கியமான காலை உணவு லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் சிக்கன் சாலட் : நொடியில் செய்ய ரெசிபி இதோ..

ஆரோக்கியமான காலை உணவு லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் சிக்கன் சாலட் : நொடியில் செய்ய ரெசிபி இதோ..

 சிக்கன் சாலட்

சிக்கன் சாலட்

காலை வேலையில் உணவாக சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சிக்கன் சாலட் காலை வேலையில் உணவாக சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைத்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். எனவே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    சிக்கன் நெஞ்சு கறி - 300 கிராம்
    மிளகுத்தூள் - 1/2 tsp
    எலுமிச்சை - 1/2 பாதி

    காய்கறிகள்

    பூண்டு - 6
    தக்காளி - 1
    வெங்காயம் -
    வெள்ளரிக்காய் -1/2
    ஆப்பிள் - 1

    மயோனைஸ் - 1 கப்
    அல்லது புளிக்காத கெட்டி தயிர்



    செய்முறை :

    சிக்கனை மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து 10 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள் அல்லது இரவு ஊற வைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்.

    மறுநாள் எடுத்து கடாயில் சிக்கனை வைத்து அதில் பூண்டை தட்டிப்போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.

    வெந்ததும் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்.

    உடல் எடையை குறைக்க நினைப்போருக்கான ஓவர் நைட் ஓட்ஸ் : எளிமையான ரெசிபி

    பின் காய்கறிகளை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டு நறுக்கிய சிக்கனையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் மயோனைஸ் சேர்த்து கிளறுங்கள்.

    தயிர் சேர்ப்பதாக இருந்தால் தயிரில் சிக்கனோடு வேக வைத்த பூண்டை போட்டு அதில் இரண்டு பச்சை மிளகாய் நறுக்கி நன்கு அடித்துக்கொண்டு காய்கறியில் ஊற்றி கலக்குங்கள்.

    அவ்வளவுதான் சிக்கன் சாலட் தயார்.
    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Chicken, Recipe

    அடுத்த செய்தி