எண்ணெய் பயன்படுத்தாமல் சிக்கனை இப்படி சூப்பராக வறுக்கலாம்.. டயட் பிரியர்களே.. உங்களுத்தான் இந்த ரெசிபி..

எண்ணெய் பயன்படுத்தாமல் சிக்கனை இப்படி சூப்பராக வறுக்கலாம்.. டயட் பிரியர்களே.. உங்களுத்தான் இந்த ரெசிபி..
சிக்கன் ரோஸ்ட்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 2:34 PM IST
  • Share this:
எண்ணெயில் பொறித்த உணவு என்றாலே டையட் பிரியர்களுக்கு ஆகாது. இது டையட் பிரியர்கள் மட்டுமல்ல அனைவரும் எண்ணெய் உணவுகளை குறைத்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. அந்த வகையில் வாய்க்கு ருசியாக எண்ணெயே இல்லாமல் எப்படி சிக்கன் ரோஸ்ட் செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் : 

கோழி கறி - 900 கிராம்


அரைக்க :

கரம் மசாலா - 1/2 tsp
கறிவேப்பிலை - 1 ஸ்பிரிங்இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 8
பச்சை மிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 12

ஊற வைக்க

மஞ்சள் பொடி - 1/2 tsp
மிளகாய் தூள் - 1 tsp
எலுமிச்சை - 1/2 பாதி
உப்பு - தே.அ
தேங்காய் பால் - 300 mlசெய்முறை :

முதலில் சிக்கனை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

பின் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.

தேங்காயை அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அரைத்த பேஸ்டை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி என ஊற வைக்க கொடுத்த பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து ஊற வையுங்கள்.

2 மணி நேரம் பிரிட்ஜில் ஊற வையுங்கள்.

தினமும் சப்பாத்தியா....இன்றைக்கு ருமாலி ரொட்டி செய்து பாருங்கள் : எத்தனை சாப்பிட்டாலும் அளவே தெரியாது

2 மணிநேரம் கழித்து கடாய் வைத்து அரைத்த தேங்காய் பாலை ஊற்றுங்கள்.

தேங்காய் பால் கொதிக்கத் துவங்கி நுரை கிளம்பும்போது ஊற வைத்த சிக்கனை ஒவ்வொன்றாக வையுங்கள். பின் கிளறிவிட்டு தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

5 நிமிடங்கள் கழித்து பார்க்க தேங்காய் பால் தேங்காய் எண்ணெயாக உருகியிருக்கும். பின் மீண்டும் கிளறி எண்ணெய் உள்ளிழுக்கும் வரை கிளறுங்கள்.

கிரேவியாக வேண்டுமெனில் அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரை ரோஸ்ட் செய்ய வேண்டுமெனில் மீண்டும் நன்கு பிரட்டிக் கொண்டே இருக்க சிக்கன் சிவந்து ட்ரையாக மாறும்.

பின் அதன் மேல் கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் அருமையான சிக்கன் ரோஸ்ட் தயார்.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading