வீட்டிலேயே சூப்பராக சிக்கன் மோமோஸ் செய்யலாம்... இதோ செய்முறை...!
வாரத்தில் ஒரு பிளேட்டாவது சாப்பிடும் பழக்கம் தற்போது 144 தடையால் அதுவும் தடைபட்டுவிட்டது.

மோமோஸ்
- News18 Tamil
- Last Updated: April 18, 2020, 9:03 PM IST
திபெத்தியர்களின் பாரம்பரிய உணவான மோமோஸ் தமிழர்களின் நாவிலும் எச்சில் ஊற வைத்துவிட்டது. வாரத்தில் ஒரு பிளேட்டாவது சாப்பிடும் பழக்கம், தற்போது 144 தடையால் தடைபட்டுவிட்டது. கவலையே வேண்டாம் வீட்டிலேயே சுவையாக சமைக்கலாம். அதுக்கு என்னென்ன செய்யனும் பார்க்கலாம்..!
தேவையான பொருட்கள் :
மாவு பிசைய மைதா - 2 கப்
உப்பு - தே.அளவு
பேக்கிங் பவுடர் - 1 1/2 tspபூரணம் செய்ய :
சிக்கன் - 1 கப்
பச்சை பட்டாணி - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 tsp
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 tsp
சோயா சாஸ் - 1/2 tsp
சிவப்பு மிளகாய் - 1
மிளகு உடைத்தது - 1/4 tsp

செய்முறை :
ஆரம்பிக்கும் முன் சிக்கன் மற்றும் பட்டாணியை தனித்தனியே வேக வைத்துக்கொள்ளுங்கள்.
மாவு பிசைய கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடங்களுக்கு ஈரத்துணியால் மூடி ஊற வைக்கவும்.
அது ஊறிக் கொண்டிருக்கும் சமயத்தில் அடுப்பில் கடாய் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வதக்கவும்.
அடுத்ததாக வேக வைத்த சிக்கனை பிச்சி போட்டு மற்றும் பட்டாணியை சேர்த்து பிறட்டவும்.
சோயா சாஸ், உப்பு சேர்க்கவும். உப்பு சேர்க்கும்போது கவனம் அவசியம். சோயா சாஸில் ஏற்கெனவே உப்பு இருக்கும்.
மசாலாக்கள் நன்கு கலந்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிடவும்.
அடுத்ததாக ஊற வைத்த மாவை சின்ன சின்ன பந்துகளாக உருட்டி சப்பாத்தி உருட்டுவது போல் சிறு சிறு வட்டங்களாக உருட்டவும். மாவு தடியாக உருட்டக் கூடாது.
பின் செய்து வைத்துள்ள சிக்கன் பூரணத்தை ஒரு ஸ்பூன் வைத்து பின் கொழுக்கட்டையை மூடுவதுபோல் மூடவும்.
இப்படியாக ஒவ்வொரு உருடைகளாக செய்யவும்.
அடுத்ததாக இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதற்குள் இட்லி தட்டில் மோமோஸை அடுக்கி வைய்யுங்கள். ஒன்றன் மேல் ஒன்று வைக்கக் கூடாது.
தண்ணீர் கொதித்த பின்னர், அடுக்கி வைத்துள்ள மோமோஸ் தட்டை குக்கரில் வைக்கவும்.
15 - 20 நிமிடங்களுக்கு வேக வைக்கவும். நேரம் முடிந்ததும் இறக்கிப் பார்த்தால் மோமோஸ் நன்கு வெந்திருக்கும்.
அவ்வளவுதான் மோமோஸை சாப்பிடலாம்.
பார்க்க :
தேவையான பொருட்கள் :
மாவு பிசைய