ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் 'சிக்கன் கீ ரோஸ்ட்' ரெசிபி இதோ..

சிக்கன் கீ ரோஸ்ட்

இப்படி வித்தியாசமாக சிக்கன் கீ ரோஸ்ட் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

 • Share this:
  சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இப்படி வித்தியாசமாக சிக்கன் கீ ரோஸ்ட் செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும். 

  தேவையான பொருட்கள் :

  மசாலா பேஸ்ட் தயாரிக்க :

  தனியா - 1.5 tsp
  சீரகம் - 1 tsp
  சோம்பு - 1 tsp
  மிளகு - 1.5 tsp
  வெந்தயம் - சிட்டிகை
  காய்ந்த மிளகாய் - 4
  காஷ்மீர் மிளகாய் - 4
  இஞ்சி - 1 துண்டு
  பூண்டு - 5
  புளி தண்ணீர் - 3 tsp

  ஊற வைக்க :

  மஞ்சள் தூள் - 1/4 tsp
  உப்பு - 1.25 tsp
  தயிர் - 4 tsp
  எலுமிச்சை சாறு - 2 tsp
  மசாலா பேஸ்ட்

  தாளிக்க :

  சிக்கன் - 500 கிராம்
  நெய் - 4 tbsp
  வெங்காயம் நறுக்கியது - 100 கிராம்
  கருவேப்பிலை - சிறிதளவு  Also read : பீர்க்கங்காய் தோல் துவையல் செய்வது எப்படி தெரியுமா?

  செய்முறை :

  மசாலா பேஸ்ட் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தவாவில் போட்டு 1 நிமிடத்திற்கு சிறு தீயில் வைத்து வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

  ஆறியதும் பின் மிக்ஸியில் போட்டு அதோடு இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பின் புளித்தண்ணீரும் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக சிக்கனை ஊற வைக்க மஞ்சல் தூள், உப்பு, தயிர் எலுமிச்சை சாறு மற்றும் அரைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். 60 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.  கடாய் வைத்து நெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.

  வதங்கியதும் ஊற வைத்த சிக்கனை சேர்த்து பிரட்டிவிடுங்கள். 20 நிமிடங்களுக்கு சிறு தீயில் வைத்து வேக வையுங்கள்.

  இறுதியாக இறக்கும் முன் கருவேப்பிலை சேர்த்து பிரட்டியதும் சில நிமிடங்கள் வறுத்ததும். அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் சிக்கன் கீ ரோஸ்ட் தயார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: