ரோட்டு கடை சுவையில் ’சிக்கன் 65’ வீட்டிலேயே எப்படி செய்வது..?

கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம்.

ரோட்டு கடை சுவையில் ’சிக்கன் 65’ வீட்டிலேயே எப்படி செய்வது..?
சிக்கன் 65
  • Share this:
சிக்கன் 65 என்று சொன்னாலே வாயில் எச்சில் ஊறும். உடனே சுவைத்து பார்க்கத் தூண்டும். ஆனால் கடையில்தான் அந்த சுவை கிடைக்கும் என்பதில்லை. வீட்டிலேயே பக்குவமாக செய்தால் அந்த சுவையைப் பெறலாம். எப்படி என்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள்

சிக்கன் - ஒரு பவுல்


இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 tsp
கடலை மாவு -1/2 கப்
சோள மாவு - 2 tspமிளகாய் தூள் - 3 tsp
கரம் மசாலா - 1 tsp
முட்டை - 2
உப்பு - தே . அளவு
தண்ணீர் - அரை கிளாஸ்
தயிர் - 2 tspசெய்முறை :

சிக்கனை சுத்தம் செய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளுங்கள். பின் மசாலாக்கள் கலக்கும் வரை பிசைந்துகொள்ளுங்கள். பிசைந்த பின் இறுதியாக தயிர் சேர்த்து பிசைய வேண்டும்.

தற்போது இந்த கலவையில் சிக்கனை அரை மணி நேரம் ஊற வையுங்கள். அடுத்ததாக பொறிக்க, கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் சிக்கனை தூவுங்கள். சிக்கனை எண்ணெய் நன்கு காய்ந்த பிறகே போட வேண்டும். இல்லையெனில் மாவு திரிந்து வரும்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading