செட்டிநாடு சுவையில் கத்தரிக்காய் தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 5
மஞ்சள் - 1/2 tsp
கரம் மசாலா - 2 tsp
மிளகாய் தூள் - 2 tsp
வெல்லம் - 2 tsp
புளி பேஸ்ட் - 1 tsp
தக்காளி - 2
உப்பு - தே . அளவு
அரைக்க :
கருப்பு எள் - 2 tsp
வேர்க்கடலை - 2 tsp
சீரகம் - 2 tsp
இஞ்சி - 1 இஞ்ச்
பூண்டு - 6
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
தாளிக்க :
எண்ணெய் - 1tsp
கடுகு - 1 tsp
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
மூன்று வேளையும் சோறு சாப்பிடுவதால் என்ன நன்மை..?
செய்முறை :
கத்தரிக்காயை நீள வாக்கில் நறுக்கிக் ஒரு ஸ்பூன் உப்பு கலந்து தண்ணீரில் போட்டு வையுங்கள்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை கடாய் வைத்து எண்ணெய் இல்லாமல் சிறு தீயில் வறுத்துக்கொள்ளுங்கள். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அதோடு பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். பின் கறிவேப்பிலை போடுங்கள்.
ரோட்டு கடை சுவையில் ’சிக்கன் 65’ வீட்டிலேயே எப்படி செய்வது..?
தற்போது அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் கரம் மசாலா, மிளகாய் தூள் , உப்பு சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். அதோடு தக்காளியும் போடுங்கள். நன்கு பிரட்டிவிட்டு 2 நிமிடம் தட்டுபோட்டு மூடி வேக வையுங்கள்.
2 நிமிடம் கழித்து வெல்லம் , புளி , அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். 15 நிமிடங்கள் கொதிக்கட்டும்.
தண்ணீர் இறுகி கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய் தொக்கு தயார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.