முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / செட்டிநாடு முட்டை மசாலா செய்வது எப்படி?

செட்டிநாடு முட்டை மசாலா செய்வது எப்படி?

செட்டிநாடு முட்டை மசாலா

செட்டிநாடு முட்டை மசாலா

ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். முட்டை கண் பார்வைக்கு நல்லது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாம் சாப்பிடும் சாதாரண கோழி முட்டையில் நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்திருக்கின்றன. அதனால்தான் `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று’ என்கிற முக்கியமான இடத்தை முட்டைக்குக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். 40 முதல் 50 கிராம் எடை கொண்ட ஒரு முட்டையில், 187 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது. சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஒரு நாளைக்குத் தேவையான கொழுப்புச்சத்தின் அளவு 300 மில்லிகிராம்தான். இரண்டு முட்டைகள் அந்தக் கொழுப்புச்சத்தின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும். முட்டை கண் பார்வைக்கு நல்லது.

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

கருவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - அரை குழிக்கரண்டி

மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 100 கிராம்

தனியாத் தூள் - 1 தேக்கரண்டி

மிளகுத் தூள் - 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 4

மாதிரிபடம்

செய்முறை:

முட்டை நான்கு எடுத்துக்கொண்டு நான்கையும் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் மிளகாயையும்  சிறிய துண்டுகளாக சதுரம், சதுரமாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பில்லை போட்டு நன்கு தாளிக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

மேலும் படிக்க... ஆந்திரா ஸ்டைல் கார நண்டு மசாலா!

பின்னர் அதே வாணலியில் மிளகுத் தூள், தனியாத் தூள், மிளகாய்த் தூள், முட்டை என எல்லாவற்றையும் சேர்த்து தேவைக்கு தகுந்தபடி உப்பு சேர்த்துக் கிளறவும். முட்டை மசாலாவுடன் சேர்ந்து வந்ததும் இறக்கி விடலாம். இதோ இப்போது செட்டிநாடு முட்டை மசாலா ரெடி. இது கலவை சாதத்திற்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

First published:

Tags: Egg recipes, Food