மதிய உணவுக்கு பொருத்தமாக இருக்கும் சேனைக்கிழங்கு மசியல் - எளிமையான ரெசிபி இதோ...

சேனைக்கிழங்கு மசியல்

மதிய உணவுக்கு சேனைக்கிழங்கு பொருத்தமாக இருக்கும்.

 • Share this:
  சேனைக்கிழங்கை சிலர் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அது நாக்கை அரிக்கும் என்ற பயமும் உண்டு. ஆனால் இதை இந்த முறையில் சமைத்தால் அரிப்பும் இருக்காது, சுவையும் பிரமாதமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  சேனைக்கிழங்கு - 500 கிராம்
  புளி தண்ணீர் - 1/4 கப்
  மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
  உப்பு - தே.அ

  மற்ற பொருட்கள் :

  வேர்க்கடலை - 1/2 கப்
  நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
  உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
  பெருங்காயத்தூல் - 1/2 ஸ்ப்ய்ய்ன்
  கருவேப்பிலை - சிறிதளவு
  பச்சைமிளகாய் - 2
  மஞ்சள் பொடி - 1/4 ஸ்பூன்
  மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்
  உப்பு - தே.அ  செய்முறை

  சேனைக்கிழங்கை சுத்தம் செய்து குக்கரில் போட்டு அதோடு புளித்தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து 4 விசில் வர வேக வையுங்கள்,

  பின் வேர்க்கடலையை உப்பு போட்டு 4 விசில் வர வேக வைத்துக்கொள்ளுங்கள்.

  தற்போது கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு சேர்த்து பொறிக்கவிடுங்கள்.

  பொன்னிறமாக வந்ததும் கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்ததாக மசித்த சேனைக்கிழங்கு, மற்றும் வேர்க்கடலையை சேர்த்துக்கொள்ளுங்கள்.

  குழந்தைகளுக்கு விருப்பமான வாழைப்பழ கேக் - வீட்டிலேயே செய்யலாம்!

  அதோடு பொடி வகைகளையும் சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள். சில நிமிடங்கள் தட்டுபோட்டு மூடி வேக வைத்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.

  அவ்வளவுதான் சேனைக்கிழங்கு மசியல் தயார்.

   

   
  Published by:Sivaranjani E
  First published: