• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சாட் மசாலா அரைப்பது இவ்வளவு சுலபமான வேலைதானா..? 10 நிமிடத்தில் அரைத்து எடுத்திட ரெசிபி....

சாட் மசாலா அரைப்பது இவ்வளவு சுலபமான வேலைதானா..? 10 நிமிடத்தில் அரைத்து எடுத்திட ரெசிபி....

சாட் மசாலா

சாட் மசாலா

சாலட் தொடங்கி பொரியல் வகை வரை எதிலும் சுவை கூட்ட ஒரு சிட்டிகை தூவினால் போதும் அந்த உணவின் சுவை வேற லெவல் டேஸ்ட் தரும். சாட் மசாலாவை கடையில் வாங்குவதுதான் உங்கள் வழக்கம் எனில் இனி தேவையில்லை. ஏனெனில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

  • Share this:
தற்போது சாட் மசாலாவும் மிளகாய் தூள் போல் இன்றியமையாத ஒரு பொடியாக சமையலறையை ஆக்கிரமித்துவிட்டது. சாலட் தொடங்கி பொரியல் வகை வரை எதிலும் சுவை கூட்ட ஒரு சிட்டிகை தூவினால் போதும் அந்த உணவின் சுவை வேற லெவல் டேஸ்ட் தரும். குறிப்பாக சாட் வகைகளுக்கு இதை அதிகம் பயன்படுத்துவதாலேயே சாட் மசாலா என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த சாட் மசாலாவை கடையில் வாங்குவதுதான் உங்கள் வழக்கம் எனில் இனி தேவையில்லை. ஏனெனில் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

சீரகம் - 1/4 கப்
தனியா தூள் - 2 Tbsp
மிளகு - 1 Tbsp
பெருங்காயத்தூள் - 1/2 Tbsp
உலந்த மாங்காய் பொடி - 1/4 கப்
உப்பு - 1 Tsp
பிளாக் சால்ட் - 2 Tbsp



செய்முறை :

கடாயில் எண்ணெய் இல்லாமல் காய வையுங்கள். பின் சீரகம் மற்றும் தனியா தூளை வறுத்து எடுங்கள். பின் அதை ஆற வையுங்கள்.

ஆறியதும் சீரகம், தனியா மிளகு மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

மழைக்காலத்தில் சூடான பிரெட் சில்லி செஞ்சு சாப்பிடலாமா..? சைனீஸ் ரெசிபில் நாவூறும் சுவை..!

இப்போது அதில் பெருங்காயத்தூள், மாங்காய் பொடி, பிளாக் சால்ட், மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி எடுங்கள்.

அவ்வளவுதான் சாட் மசாலா தயார். அதை காற்று புகாத டப்பாவில் அடைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: