• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சப்பாத்திக்கு சூப்பரான சைடிஸ் இதுதான்!

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஸ் இதுதான்!

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

சுவையான காலிஃபிளவர் குருமா செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்ளலாம வாங்க...

  • Share this:
    சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்கு தொட்டு கொள்ள சுவையான சூப்பரான காலிஃபிளவர் குருமாவை செய்வது எப்படி என்று  பார்க்கலாம் வாங்க....

    தேவையான பொருள்கள்

    காலிஃபிளவர் - 1 சிறியது

    தக்காளி - 1

    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

    மல்லித்தூள் - 2 மேஜைக்கரண்டி

    சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

    மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை - சிறிது

    வறுத்து பொடிக்க

    பட்டை - 1 இன்ச் அளவு

    கிராம்பு - 2

    சோம்பு - 1 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - தேவைக்கு

    பட்டை - 1/2 இன்ச் அளவு

    கிராம்பு - 1

    பெரிய வெங்காயம் - 1

    கறிவேப்பிலை - சிறிது

    தேங்காய் துருவல் - அரை கப்

    காலிஃபிளவர்


    செய்முறை

    முதலில்  வெந்நீரில் முழு காலிஃபிளவரை போட்டு 10 நிமிடம் மூடி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காலிஃபிளவரை எடுத்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு மூன்றையும் பொன்னிறமாக வறுத்து மிக்சியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். தேங்காயையும் மிக்சியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த பின் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் பட்டை கிராம்பு பொடி, வெட்டி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.

    தக்காளி நன்கு சுருள வதங்கியதும் காலிஃபிளவருடன் ஒரு கை தண்ணீர் தெளித்து வேகும் வரை நன்கு வதக்கவும். காலிபிளவர் நன்கு வெந்ததும் மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி 2 கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.

    மேலும் படிக்க... சிக்கன் பிரைடு ரைஸ்!

    தந்தூரி சிக்கன் வீட்டிலேயே சுலபமாக செய்ய ரெசிபி...

    சுவையான சுறா புட்டு செய்வது எப்படி?

    சிக்கன் நூடுல்ஸ் வீட்டிலேயே செய்வது எப்படி?

    அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குருமா திக்கானதும் அதில் கொத்தமல்லித் தழையை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான காலிஃபிளவர் குருமா ரெடி.

    மேலும் படிக்க... வாயில் போட்டதும் கரையும் சாஃப்ட் சப்பாத்தி ரகசியம் என்ன தெரியுமா?

    இனி மஷ்ரூம் குருமா இப்படி வைத்து பாருங்கள்...

    ஆட்டு தலைக்கறி குழம்பு செய்வது எப்படி?

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: