• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • எண்ணெய் இல்லாமல் கேரட் சிப்ஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

எண்ணெய் இல்லாமல் கேரட் சிப்ஸ் செய்து சாப்பிட்டிருக்கீங்களா..? இன்னைக்கே டிரை பண்ணி பாருங்க...

கேரட் சிப்ஸ்

கேரட் சிப்ஸ்

எண்ணெய்யில் நன்கு வறுக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு. எனவே கேரட் , பீட்ரூட் மூலம் சிப்ஸ் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த மாற்று வழி.

  • Share this:
சிப்ஸ் வகைகள் என்றாலே அது ஆரோக்கியமற்றது என்பதுதான் பலருடைய எண்ணம். ஆனால் அது நம் நொறுக்குத் தீனி தேவைக்கு சிறந்ததாக இருக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் கருதி தவிர்க்கலாம். சரி அதற்கான மாற்று வழிதான் என்ன..? இப்படி கேரட் , பீட்ரூட் மூலம் சிப்ஸ் செய்து சாப்பிடுவதுதான் சிறந்த மாற்று வழி. அப்படி கேரட்டில் எப்படி சிப்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 2
சில்லி ஃபிளேக்ஸ் - 1 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
வெஜிடெபிள் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
ஓரிகனோ - 1 ஸ்பூன்
சாட் மசாலா - 1/2 ஸ்பூன்
பூண்டு பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தே.அ



செய்முறை :

முதலில் கேரட்டை நன்கு கழுவி அதன் தோலை சீவிக்கொள்ளுங்கள். பின் அவற்றை மெல்லிய ஸ்ட்ரிப் போல் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள். ஈரப்பதம் இருக்கக் கூடாது.

அதில் ஓரிகனோ, சாட் மசாலா, சில்லி ஃபிளேக்ஸ், மிளகு , பூண்டு பொடி உப்பு , 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு குளுக்கி கலக்கிக்கொள்ளுங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பீட்ரூட் ஆலூ கட்லெட் : இன்னைக்கே செஞ்சு கொடுங்க...

இப்போது அவற்றை பேக்கிங் டிரேயில் அடுக்கி வைத்து 180 டிகிரியில் 15-20 நிமிடங்கள் நேரம் வைத்து பேக் செய்யுங்கள்.

பின் அவற்றை எடுத்து மயோனைஸ், சாஸ் அல்லது புதினா சட்னியில் தொட்டு சாப்பிடலாம்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: