Home /News /lifestyle /

காரசார உணவுகளுக்கு பொருத்தமான கத்தரிக்காய் துவையல் - எப்படி செய்வது தெரியுமா..?

காரசார உணவுகளுக்கு பொருத்தமான கத்தரிக்காய் துவையல் - எப்படி செய்வது தெரியுமா..?

மிக எளிதாக, குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ரெசிபி

மிக எளிதாக, குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ரெசிபி

மிக எளிதாக, குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ரெசிபி

    கத்தரிக்காய் தொக்கு காரசார உணவுக்குப் பொருத்தமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    கத்தரிக்காய் - 3
    காய்ந்த மிளகாய் - 3
    மிளகு - 1 tsp
    கடலை பருப்பு - 1 tsp
    உளுத்தம் பருப்பு - 1 tsp
    கடுகு - 1 tsp
    மஞ்சள் தூள் - 1/2 tsp
    மிளகாய் தூள் - 1 tsp
    கறிவேப்பிலை - சிறிதளவு
    புளி - 30 கிராம்
    உப்பு - தே.அளவு
    எண்ணெய் - தாளிக்க



    செய்முறை :

    கடாயில் எண்ணெய் விட்டு கத்தரிக்காயை காம்பு நீக்கி வதக்கிக்கொள்ளுங்கள். பின் கத்தரிக்காயை கைகளால் மசித்துக்கொள்ளுங்கள்.

    அடுத்ததாக மீண்டும் கடாயில் காய்ந்த மிளகாய், கடலை பருப்பு, உளுத்தம் பருக்கு , மிளகு சேர்த்து பொன்னிறமாக வதக்குகள்.

    பின் அதில் மசித்த கத்தரிக்காய் சேர்த்து வதக்குங்கள்.

    உப்பு , மிளகாய் தூள், மஞ்சள் சேர்த்து வதக்குங்கள். பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அடுத்ததாக புளித் தண்ணீர் ஊற்றுங்கள்.

    காலை உணவிற்கு எதுவுமே இல்லையா..? 5 நிமிடத்தில் அவல் உப்புமா செய்ய ரெசிபி இதோ..!

    பின் தண்ணீர் நன்கு இறுகி கெட்டிப் பதம் வரும் வரை வதக்கி கொதிக்க வையுங்கள்.

    கெட்டியானதும் அடுப்பை அணைத்துவிட்டு கிண்ணத்தில் போட்டுப் பரிமாறுங்கள்.

    சுவையான கத்தரிக்காய் துவையல் தயார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி