ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சூப்பரான சுவையில் கத்தரிக்காய் பக்கோடா குழம்பு..! எப்படி செய்யனும் தெரியுமா..?

சூப்பரான சுவையில் கத்தரிக்காய் பக்கோடா குழம்பு..! எப்படி செய்யனும் தெரியுமா..?

கத்தரிக்காய் பக்கோடா குழம்பு

கத்தரிக்காய் பக்கோடா குழம்பு

அன்பால் மட்டுமல்ல இப்படி வகைv வகையாக சமைத்தும் வீட்டில் உள்ளவர்களை ஈர்க்கலாம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  வீட்டில் உள்ளவர்களை அன்பால் மட்டுமல்ல, இப்படி வகை வகையாக சமைத்தும் ஈர்க்கலாம். அப்படி இன்று வீட்டில் கத்தரிக்காய் பக்கோடா குழம்பு செஞ்சு கொடுங்க. எப்படி செய்யுறது தெரிஞ்சுக்க மேலும் படியுங்கள்.

  தேவையான பொருட்கள் :

  பக்கோடா செய்ய :

  கடலை மாவு - 1 கப்

  அரிசி மாவு - 2 tsp

  மஞ்சள் தூள் - 1/4 tsp

  மிளகாய் தூள் - 1 tsp

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/4 tsp

  பச்சை மிளகாய் - 1

  உப்பு - சிறிதளவு

  வெங்காயம் - 1

  கறிவேப்பிலை

  கொத்தமல்லி தழை

  எண்ணெய்

  குழம்பு வைக்க :

  கத்தரிக்காய் - 200 கிராம்

  எண்ணெய் - 2 tsp

  வெங்காயம் - 1

  பச்சை மிளகாய் - 1

  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp

  உப்பு - தே. அளவு

  தக்காளி - 2

  மஞ்சள் தூள் - 1/4 tsp

  மிளகாய் தூள் - 1 tsp

  மல்லி தூள் - 1 tsp

  கறிவேப்பிலை

  கொத்தமல்லி தழை

  செய்முறை :

  முதலில் பக்கோடா செய்ய கிண்ணத்தில் கடலை மாவுடன் மற்ற பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெங்காயம் நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள்.

  பின் பக்கோடா போடுவதற்கு ஏற்ப தண்ணீர் ஊற்றி பிசைந்துகொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றுங்கள். காய்ந்ததும் பக்கோடா மாவை உதிரி உதிரியாகப் போடுங்கள்.

  பொன்னிறமாக வந்ததும் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

  அடுத்ததாக குழம்பு வைக்க கடாய் வைத்து எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்குங்கள். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

  வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு பிறட்டவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

  குழம்பு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊற்றுங்கள். மிளகாய் தூள் வாசனை போகும் வரை கொதிக்க வையுங்கள். பின் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை போடுங்கள். பக்கோடா பெரிதாக இருந்தால் நறுக்கிப் போடலாம்.

  தற்போது தீயைக் குறைத்து வைத்து 15 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கிவிடுங்கள்.

  அவ்வளவுதான் சூப்பரான சுவையில் கத்தரிக்காய் பக்கோடா குழம்பு தயார்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: