முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் கத்தரிக்காய் கிரேவி : இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே அசத்திடுங்க…

சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும் கத்தரிக்காய் கிரேவி : இதுவரை செஞ்சதில்லையா..? இன்னைக்கே அசத்திடுங்க…

கத்தரிக்காய் கிரேவி

கத்தரிக்காய் கிரேவி

சப்பாத்தி செய்வது சுலபம் என்றாலும் அதற்கு பொருத்தமான சைட் டிஷ் செய்வதுதான் பெரும் குழப்பம். ஒரே மாதிரியான சைட் டிஷ் செய்தாலும் போர் அடித்துவிடும். எனவே வித விதமாக சைட் டிஷ் செய்து அசத்த நினைத்தால் உங்களுக்கு இந்த கத்தரிக்காய் கிரேவி கைக்கொடுக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இப்போது பலரும் இரவு டின்னருக்கு சப்பாத்தியே அதிகம் விரும்புகின்றனர். நீரிழிவு நோயாளிகள் தொடங்கி டயட் இருக்கும் ஃபிட்னஸ் பிரியர்கள் வரை சப்பாத்தியே சாப்பிடுகின்றனர். சப்பாத்தி செய்வது சுலபம் என்றாலும் அதற்கு பொருத்தமான சைட் டிஷ் செய்வதுதான் பெரும் குழப்பம். ஒரே மாதிரியான சைட் டிஷ் செய்தாலும் போர் அடித்துவிடும். எனவே வித விதமாக சைட் டிஷ் செய்து அசத்த நினைத்தால் உங்களுக்கு இந்த கத்தரிக்காய் கிரேவி கைக்கொடுக்கலாம். ரெசிபியை டிரை பண்ணி பாருங்க…

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் – 4

வெங்காயம் – 1

தக்காளி – 2

எண்ணெய் – 2 tsp

கடுகு – 1/2 tsp

இஞ்சி – 1 துண்டு

பூண்டு – 4

தயிர் – 1 கப்

தனியா தூள் – 1 tsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

மிளகாய் தூள் – 1 tsp

உப்பு – தே. அ

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

முதலில் கத்தரிக்காயை எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் தக்காளி இஞ்சி , பூண்டு மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

தற்போது கத்தரிக்காயை வதக்கிய அதே கடாயில் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து தாளியுங்கள்.

நாட்டு கோழி குருமா செய்வது எப்படி?

பின் வெங்காயம் , கருவேப்பிலை சேர்த்து நன்கு சிவக்க வதக்கிக்கொள்ளுங்கள்.

வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து வதக்குங்கள். தண்ணீர் இறுகி சுண்டியதும் தூள் வகைகளை சேர்த்துக் கிளறுங்கள்.

அதோடு தயிர் , உப்பு சேர்த்து கலந்துவிட்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்து தட்டுபோட்டு மூடி கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் சுண்டும் பதம் வரும் போது வதக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து கலந்து சிம்மில் மீண்டும் சில நொடிகள் கொதிக்க விடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் கிரேவி தயார். இது சப்பாத்திக்கு மிக அருமையான சைட் டிஷ்ஷாக இருக்கும்.

First published:

Tags: Brinjal, Chapati