கத்தரிக்காய் வெந்தயக்கீரை சப்ஜி : மதிய உணவுக்கு சூப்பரான ரெசிபி

கத்தரிக்காய் வெந்தயக்கீரை சப்ஜி : மதிய உணவுக்கு சூப்பரான ரெசிபி

மாதிரி படம்

கத்தரிக்காயும் வெந்தயக் கீரையும் நல்ல காம்போ என்பதால் சுவைக்கவும் அருமையாக இருக்கும்.

 • Share this:
  கத்தரிக்காய் வெந்தயக்கீரை சப்ஜி உடலுக்கு ஆரோக்கியமானது. குறிப்பாக வெந்தயக் கீரை உடலுக்கு குளுர்ச்சி தரக்கூடியது. இதை மதிய உணவுக்கு ஒரு முறை டிரை பண்ணி பாருங்கள். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கலாம்.

  தேவையான பொருட்கள் :

  கத்தரிக்காய் - 15
  வெந்தயக்கீரை - 2 கப்
  மஞ்சள் பொடி - 1/2 tsp
  மிளகாய் தூள் - 1 tsp
  தனியாத்தூள் - 2 tsp
  சீரகப்பொடி - 1 tsp
  கடுகு - 1/2 tsp
  சீரகம் - 1/2 tsp
  எண்ணெய் - 3 tsp
  உப்பு - தே.அ  செய்முறை :

  கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

  அடுத்ததாக உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். தண்ணீர் இறுகி வெந்ததும் வெந்தயக்கீரை சேர்க்கவும். கீரையும் வெந்ததும் கொடுத்துள்ள அனைத்து பொடிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  உருளைக்கிழங்கு வாங்கும் போது அவை நல்லதா என்பதை எப்படி பார்த்து வாங்குவது?

  நன்கு கிளறிவிட்டு தட்டுபோட்டு மூடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்துப் பார்க்க ரெசிபி தயார்.

  இந்த கத்தரிக்காய் வெந்தயக்கீரை சப்ஜி மதிய உணவுக்குப் பொருத்தமாக இருக்கும்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sivaranjani E
  First published: