Brinjal chutney | கத்தரிக்காய்யில் குறிப்பிடத்தக்க அளவு இரும்பு மற்றும் கால்சியம் சத்துகள் உள்ள. அவை எலும்பு ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த உடல் வலிமைக்கும் உதவுகின்றன
கத்தரிக்காய்களில் கிட்டத்தட்ட கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் மக்களுக்கு இது ஆரோக்கியமானது. கத்தரிக்காய் உண்பதால் நமது இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். அந்த வகையில் இந்த கத்தரிக்காயில் சுவையான சட்னி செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்...
வெங்காயம், தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தாளிக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பின்னர் வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு கருகவிடாமல் மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கி எடுத்து விடவும். அதன் பின்னர் நறுக்கின வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கியதும் தனியாக எடுத்துக் வைக்கவும்.
பிறகு கத்திரிக்காய், தக்காளி இரண்டையும் போட்டு நன்கு வதக்கி விட்டு ஆற வைக்கவும். வதக்கியப் பொருட்கள் எல்லாம் ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். பிறகு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கொட்டி கிளறி விட்டு பரிமாறலாம். சுவையான கத்தரிக்காய் சட்னி ரெடி...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.