குழந்தைகள் விரும்பும் பிரெட் ரோல் ஸ்டஃப்!

news18
Updated: March 14, 2019, 3:37 PM IST
குழந்தைகள் விரும்பும் பிரெட் ரோல் ஸ்டஃப்!
மாதிரிப் படம்
news18
Updated: March 14, 2019, 3:37 PM IST
மாலை வீடு திரும்பும் குழந்தைகள் மிகுந்த பசியுடன்தான் வருவார்கள். அந்தச் சமயம் அவர்களுக்கு பிடித்த உணவுகளை தயார் செய்து கொடுத்தால் அதில் அவர்கள் அடையும் உற்சாகமும் துள்ளலும் அலாதியானது. அதே உற்சாகத்துடன் குழந்தைகள் படிக்கத் தொடங்குவார்கள்.

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் - 5
வெங்காயம் - ஒரு கப்
உருளைக் கிழங்கு - 2
பட்டாணி - அரை கப்
கேரட் - ஒரு கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 tsp
ஸ்வீட் கார்ன் - அரை கப்
மிளகாய் தூள் - 1 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
கரம் மசாலா - 1/2 tsp
மாங்காய் பொடி (Aamachoor ) - 1/2 tsp
உப்பு - 1/2 tsp
துருவிய சீஸ் அல்லது பனீர் - அரை கப்
தாளிக்க, பொறிக்க
எண்ணெய் - தேவையான அளவுசெய்முறை :

பட்டாணியை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து, தனியாக பாத்திரத்தில் வேக வைத்துக்கொள்ளுங்கள். கேரட்டை சீவிக்கொள்ளுங்கள். வெங்காய்த்தை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

உருளைக் கிழங்கை வேக வைத்து நன்கு கட்டிகள் இல்லாமல் மசித்துக்கொள்ளுங்கள்.

தற்போது கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக வேக வைத்த பட்டாணி மற்றும் கேரட் சேர்த்து வதக்குங்கள். தற்போது மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்கு பேஸ்ட் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதோடு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மாங்காய் பொடி , உப்பு சேர்த்து மசாலாக்காள் ஒன்றோடு ஒன்று சேரும் வரை நன்குக் வதக்கிக்கொள்ளுங்கள். அடுத்ததாக துருவிய சீஸ் அல்லது துருவிய பனீர் சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள். பிரெட்டிற்குத் தேவையான ஸ்டஃப் ரெடி.

அடுத்ததாக பிரெட்டை தண்ணீரில் நனைத்து, ஈரம் போகும் வரை கைகளில் வைத்து அழுத்துங்கள். அதன் அளவைக் கொஞ்சம் அதிகமாக்க கைகளால் தட்டுங்கள்.

தற்போது, செய்து ரெடியாக இருக்கும் ஸ்டஃபை உருளை வடிவில் பிசைந்து க்ராஸ் நிலையில் வையுங்கள். பிரெட்டின் எதிர் முணைகளை இணையுங்கள். அவற்றை பிரியாதபடி பேட்ச் செய்யுங்கள். கைகளில் உருளையாக உருட்டுங்கள்.

தற்போது கடாயில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், பிரெட் ஸ்டஃபை பொன்னிறமாகப் பொறித்து எடுங்கள்.

சுவையான பிரெட் ஸ்டஃப் தயார். இதற்கு டொமேடோ சாஸ் பொருத்தமாக இருக்கும்.
First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...