யம்மி பிரெட் பீட்ஸா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம்?

எவ்வளவு உண்டாலும் தெகிட்டாத யம்மி சுவை.

news18
Updated: March 2, 2019, 6:11 PM IST
யம்மி பிரெட் பீட்ஸா வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம்?
மாதிரிப் படம்
news18
Updated: March 2, 2019, 6:11 PM IST
இன்றைய இளைஞர்களின் ஃபேவரெட் உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாதது பீட்ஸா. எவ்வளவு உண்டாலும் தெவிட்டாத சீஸ் யம்மி சுவை. வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் ? ரெசிபி இதோ...

தேவையான பொருட்கள்:

பிரெட் துண்டுகள் -4
ரவை - 1 tsp
உப்பு - 1 tsp
குடை மிளகாய் - 1/2 கப்
வெங்காயம் - 1/2 கப்
தக்காளி - 1/2 கப்
கோஸ் - 1/2 கப்
காரட் - 1/2 கப்
பச்சை மிளகாய் - 1 tsp
வெண்ணெய் - 3 tsp
சீஸ் - தேவைக்கு ஏற்ப
காய்ந்த மிளகாய் - 2
பால் - 4 tspசெய்முறை :

வெங்காயம், குடை மிளகாய் மற்றும் பச்சை மிளகாய், ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

கோஸ் மற்றும் காரட்டை சீவிக் கொள்ளுங்கள். காய்ந்த மிளகாயை உடைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது ஒரு பாத்திரத்தில் காய்கறிகளை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் உடைத்த மிளகாய் பொடி, ரவை, உப்பு, பால் நான்கையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

தற்போது ஒரு பிரெட் எடுத்துக்கொண்டு அதில் இரு புறமும் வெண்ணெய் தடவுங்கள். அதன் ஒரு புறத்தில், கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையை வைத்து பிரெட் முழுவதும் பரப்புங்கள். அதன் மேல் தேவைக்கு ஏற்ப சீஸைத் தூவுங்கள்.

தற்போது தவாவில் வெண்ணெய் தடவி பிரெட் துண்டுகளை வையுங்கள். தவாவை மூடி வையுங்கள். அடுப்பை சிறு தீயில் வையுங்கள். மூடியைத் திறந்து பாருங்கள். சுவையான பிரெட் பீஸா தயார்.
First published: March 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...