ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

வீட்டிலேயே மிகவும் எளிமையாக பிரெட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

வீட்டிலேயே மிகவும் எளிமையாக பிரெட் குலாப் ஜாமூன் செய்வது எப்படி?

பிரெட் குலாப் ஜாமூன்

பிரெட் குலாப் ஜாமூன்

வீட்டிலேயே மிக எளிமையாக நீங்கள் குலாப் ஜாமூன் செய்து விடலாம்.எப்படி செய்வது என பார்க்கலாம்

  பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட் விலை கூடுதலாக இருக்கிறது அல்லது அந்த அளவுக்கு தரமாக இல்லை என நினைக்கிறீர்களா? இருப்பினும் எதையாவது இனிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என மனம் துடிக்கிறதா? வீட்டிலேயே மிக எளிமையாக நீங்கள் குலாப் ஜாமூன் செய்து விடலாம்.

  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் இது பிடித்தமான ஸ்வீட் ஆக இருக்கும். அதே சமயம், சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதனை அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

  தேவையான பொருட்கள் :

  பிரெட் - 6 துண்டுகள்

  பால் - 6 டேபிள்ஸ்பூன்

  சர்க்கரை - 1 கப்

  நீங்கள் பிரவுன் பிரெட், கோதுமை பிரட் அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற எந்த ஒரு பிரட் வகையையும் எடுத்துக் கொள்ளலாம். முதலில் பிரெட்-ஐ 2 அல்லது 3 துண்டுகளாக நறுக்கி, அதை பிளெண்டரில் தூள் செய்து கொள்ளவும்.

  மாவு பிசைந்து எடுக்கவும்

  பிரெட் தூளில், எடுத்து வைத்துள்ள பால் சேர்த்து, நன்றாக பிசையவும். தொடக்கத்தில் ஒன்றோடு, ஒன்று ஒட்டாமல் சற்று பிசுபிசுப்பாக தோன்றும். இருப்பினும், நன்றாக பிசைந்தால் ஒரு இலகுவான மாவு கிடைக்கும். பால் கூடுதலாக சேர்க்க வேண்டாம்.

  சர்க்கரை பாகு தயார் செய்யவும்

  இதற்கிடையே, குலாப் ஜாமூனுக்கு தேவையான சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதை நன்றாக கொதிக்க வைத்து, சர்க்கரை நன்றாக கரையும்படி செய்ய வேண்டும். கரைந்த பிறகு, தீயை சற்று குறைத்து, இந்த கலவை கெட்டியாக வரும் வரை வைத்திருக்கவும். சரியான பதம் கிடைத்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.

  மாவு உருண்டைகளை பொறிக்கவும்

  பிசைந்து வைத்திருந்த மாவை எடுத்து, சிறு, சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்கவும். இரு கைகளுக்கு நடுவே மாவை வைத்து உருட்டி எடுக்கலாம். அதை ஒரு பிளேட்டில் எடுத்துக் கொள்ளவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். இந்த உருண்டைகள் நல்ல பொன்னிறமாக வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பொறித்த உருண்டைகளை, தூய்மையான வெள்ளைத் தாளில் ஒட்டி எடுத்து, அதில் இருந்து எண்ணெய்யை பிரித்து எடுக்கவும்.

  பாகு சேர்க்கவும்

  ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த சர்க்கரை பாகில், இந்த உருண்டைகளை சேர்த்து மீண்டும் லேசாக சூடேற்றவும். லேசான தீயில் சுமார் 2 நிமிடம் சூடேற்றிய பிறகு அடுப்பை ஆப் செய்து விடலாம். சுமார் ஒரு மணி நேரம் இந்த சர்க்கரைப் பாகில் அந்த உருண்டைகள் ஊற வேண்டும்.

  பரிமாறுவதற்கு தயார்

  சர்க்கரை பாகில் ஊறிய பிறகு உருண்டைகள் நல்ல சாஃப்ட்டாகவும், ஸ்வீட்டாகவும் மாறி விடும். இப்போது, நீங்கள் பரிமாறுவதற்கான குலோப் ஜாமூன் தயார். இதை நீங்கள் சூடாகவும் சாப்பிடலாம் அல்லது சூடு ஆறிய பிறகும் சாப்பிடலாம்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Recipe, Sweets