• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • ஓவன் , ஈஸ்ட் இல்லாமல் வீட்டிலேயே பேக்கரி சுவையில் பிரெட் தயாரிக்கலாம் : தேவையான பொருட்கள் இவைதான்..!

ஓவன் , ஈஸ்ட் இல்லாமல் வீட்டிலேயே பேக்கரி சுவையில் பிரெட் தயாரிக்கலாம் : தேவையான பொருட்கள் இவைதான்..!

பிரெட் செய்முறை | Bread Making tips

பிரெட் செய்முறை | Bread Making tips

பேக்கரி பிரட்டை வீட்டிலேயே தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. பிரட் தயாரிக்க வேண்டுமென்றால் ஈஸ்ட், பேக்கரி ஓவன் ஆகியவை காட்டாய?

  • Share this:
சாதாரணமாக பேக்கரி ஸ்னாக்ஸ் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பேக்கரி பிரட் என்றால் அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால் பொதுவாக அதனை கடைகளில் வாங்கி சாப்பிடுவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது தெரியாது.

இருப்பினும், இது போன்ற பேக்கரி பிரட்டை வீட்டிலேயே தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. பிரட் தயாரிக்க வேண்டுமென்றால் ஈஸ்ட், பேக்கரி ஓவன் ஆகியவை காட்டாயம் வேண்டும். ஆனால், இவை இரண்டும் இல்லாமல் சூப்பரா பிரட் தயாரிக்க ஒரு வழி இருக்கிறது. ஒரு சில பொருட்களுடன், இந்த சுவையான ரொட்டியை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். எப்படி என்பதை பற்றிக் காணலாம்.

பிரட் செய்ய தேவையான பொருட்கள்:

தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 3 தேக்கரண்டி
உப்பு - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/3 கப்
மைதா மாவு - 4 கப்
முட்டை - 1
வெண்ணிலா எஸ்ட்ராக்ட் - 1 தேக்கரண்டி
பால் - 2-3 டீஸ்பூன்



செய்முறை:

ஒரு பெரிய கிண்ணத்தில், மைதா மாவு, பேக்கிங் பவுடர், வெண்ணிலா எஸ்ட்ராக்ட், ஒரு முட்டை மற்றும் பால் உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும். இப்போது கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து மாவு பதத்திற்கு பிசைந்துக் கொள்ளவும். இறுதியாக சிறிது எண்ணெய் ஊற்றி பிசைய வேண்டும். நீங்கள் ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். மாவு மிருதுவான பதத்திற்கு வரும் வரையில் உங்கள் கைகளைப் கொண்டு நன்றாக பிசைய வேண்டும்.மாவை தயாரித்த பிறகு உங்களுக்கு வேண்டிய பிரட் வடிவத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

சண்டே மட்டும்தான் ஃபேமிலி டைமா..? மகிழ்ச்சியை அதிகரிக்க 5 நிமிடத்தில் அசத்தல் ஸ்நாக்ஸ் ரெசிபீஸ்..!

அதன் மேல் ஒரு எக்ஸ் அடையாளத்தை உருவாக்கவும், இதனால் மைக்ரோவேவில் ஹீட் செய்யும்போது மாவு வெடிக்காது. எல்லாம் தயாரானதும் மாவினை ஒரு கொள்கலனுக்கு மாற்றி மைக்ரோவேவ் ஓவனில் வைக்கவும். மேலும் அதிக வெப்பத்தில் 5 நிமிடங்கள் செட் செய்ய வேண்டும். இப்பொது ஓவனில் இருந்து பிரட்டை வெளியே எடுத்து, அது குளிர்ந்தவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். அவ்வளவுதான் பிரட் ரெடி.



வீட்டிலேயே பிரட் தயாரிப்பதன் மூலம் நீங்கள் தைரியமாக உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு இதனை பரிமாறலாம். இருப்பினும், கடைகளில் விற்கப்படும் பிரட்டிற்கும், வீட்டில் தயாரிக்கப்படும் பிரட்டிற்கும் பல வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இருக்காது. மேலும், பிரட் வைத்து பல எண்ணற்ற சுவையை டிஷ்களை செய்து பரிமாறலாம். பிரட் பட்டர் ஜாம், பிரட் ஆம்லெட்,பிரட் டோஸ்ட், பிரட் பஜ்ஜி, மசாலா பிரட், பிரட் சாண்ட்வெஜ் என எண்ணற்ற ஸ்னாக் ரெசிபிக்களை செய்து அசத்தலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: