பெண்களின் கருப்பைக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுத்தங்களி : இதோ செய்முறை..!

வடிகட்டிய தண்ணீரில் பொடியாக்கிய உளுந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கொட்டுங்கள். கட்டியாக சேராமல் இருக்க மத்தின் பிடி கட்டைக் கொண்டு கடைந்து கொண்டே மாவை கலக்குங்கள்.

பெண்களின் கருப்பைக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுத்தங்களி : இதோ செய்முறை..!
பெண்களின் கருப்பைக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுத்தங்களி
  • Share this:
பெண்களின் கருப்பை மற்றும் கருப்பை எலும்புகளுக்கு உறுதி தரும் கருப்பு உளுத்தங்களி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனை வெல்லம் - 250 கிராம்


கருப்பு உளுந்து - 200 கிராம்
நல்லெண்ணெய் - தே.அ

செய்முறை :

கிண்ணம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி பனை வெல்லத்தை உருக்கிக்கொள்ளுங்கள்.

அதற்கிடையே உளுந்தை கடாயில் வறுத்து ஆறிய பின் மிக்ஸியில் மைய பொடியாக்கிக்கொள்ளுங்கள்.

வெல்லம் உருகியதும் அடுப்பை அணைத்துவிட்டு தண்ணீரை வடிகட்டிக்கொள்ளுங்கள்.

காலை உணவுக்கு நச்சுனு இருக்கும் கத்தரிக்காய் கடையல் : 15 நிமிடங்கள் போதும்

தற்போது வடிகட்டிய தண்ணீரில் பொடியாக்கிய உளுந்து பொடியை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் கொட்டுங்கள். கட்டியாக சேராமல் இருக்க மத்தின் பிடி கட்டைக் கொண்டு கடைந்து கொண்டே மாவை கலக்குங்கள்.

அடுத்ததாக அதை அப்படியே அடுப்பில் வைத்து கூடுமான வெல்லம் தண்ணீர் ஊற்றி கடைந்துகொண்டே இருங்கள். வெந்ததும் அதன் மேல் தேவையான அளவு வெல்லம் சேர்த்துக் கடையுங்கள்.

கெட்டியான பதத்தில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் உளுத்தங்களி தயார்.
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading