• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கருப்பு உளுந்து சுண்டல் செய்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதா..? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்...

கருப்பு உளுந்து சுண்டல் செய்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதா..? உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்...

கருப்பு உளுந்து சுண்டல்

கருப்பு உளுந்து சுண்டல்

பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியத்தை வலுபெறச் செய்வதில் கருப்பு உளுந்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இது எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது. நீரிழிவு நோய் , இரத்த சோகை, செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு கருப்பு உளுந்து நன்மை அளிக்கிறது.

  • Share this:
கருப்பு உளுந்தின் மகத்துவம் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக பெண்களுக்கு கருப்பை ஆரோக்கியத்தை வலுபெறச் செய்வதில் கருப்பு உளுந்து முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் இது எலும்புகளுக்கு வலு கொடுக்கிறது. நீரிழிவு நோய் , இரத்த சோகை, செரிமானப் பிரச்னை உள்ளவர்களுக்கு கருப்பு உளுந்து நன்மை அளிக்கிறது. உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் அளிப்பதால் உங்கள் அன்றாட ஸ்நாக்ஸ் வகைகளில் கருப்பு உளுந்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். காலை அல்லது மாலையில் இந்த சுண்டலை செய்து சாப்பிடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கருப்பு உளுந்து - 1 கப்
தேங்காய் துருவல் - 2 tsp
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
சீரகம் - 1 tsp
உப்பு - தே.அ

தாளிக்க :

கடுகு - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

கருப்பு சுண்டல் செய்ய முதல் நாள் இரவு வறுத்து ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.

மறுநாள் காலை கழுவி குக்கரில் போடுங்கள். பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வர வேக வைக்கவும்.

உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

வெந்ததும் தண்ணியை வடிகட்டிக்கொள்ளுங்கள்.

பின் தாளிக்க கடாய் வைத்து எண்ணெய் மற்றும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வேக வைத்த உளுந்தில் போடுங்கள்.

இறுதியாக துருவிய தேங்காயை அதில் தூவி கலந்துவிடுங்கள்.

அவ்வளவுதான் உளுந்து சுண்டல் தயார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: