• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காய்கறி விலை உயர்வு கிறுகிறுக்க வைக்கிறதா...? சூப்பரான காராமணி குழம்பு செய்யலாம்...!

காய்கறி விலை உயர்வு கிறுகிறுக்க வைக்கிறதா...? சூப்பரான காராமணி குழம்பு செய்யலாம்...!

காராமணி குழம்பு.

காராமணி குழம்பு.

  • Share this:
    காய்கறி விலை நாளுக்கு நாள் கிடுகிடுவென ஏறும் நேரத்தில் இப்படி சிக்கனத்தைக் கடைபிடிக்க காராமணி குழம்பு வைப்பதே புத்திசாலித் தனம். எப்படி செய்ய வேண்டும்?

    தேவையான பொருட்கள் : 

    காராமணி - 1 கப்
    மஞ்சள் பொடி - 1/4 Tsp
    தேங்காய் எண்ணெய் - 1 Tsp
    சின்ன வெங்காயம் - 1/4 கப்
    உப்பு - தே. அளவு

    அரைக்க :

    தனியா - 1 Tsp
    காய்ந்த மிளகாய் - 4
    சீரகம் - 1/2 Tsp
    வெந்தையம் - 1/2Tsp
    மிளகு - 1 Tsp
    தேங்காய் - 1/2 கப்

    மஞ்சள் - தேன் ரெசிப்பி: சாப்பிட்டா என்ன ஆகும் தெரியுமா..?

    தாளிக்க :

    தேங்காய் எண்ணெய் - 1 Tsp
    கடுகு - 1/2 Tsp
    காய்ந்த மிளகாய் - 2
    கருவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 2 பற்கள்
    கொத்தமல்லி - சிறிதளவு



    செய்முறை :

    காராமணி 4 மணி நேரம் ஊற வேண்டும். இரவு தூங்கும் முன் கழுவி ஊற வைத்துவிடுங்கள்.

    அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் இல்லாமல் வறுத்து ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    ஊற வைத்த காராமணியை குக்கரில் போட்டு மஞ்சள் பொடி மற்றும் கொஞ்சம் உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும். தானாக காற்று வெளியேறும் வரை திறக்க வேண்டாம்.

    இன்னைக்கு வீட்டில் புடலங்காய் பொரியல் செஞ்சு பாருங்க..!

    கடாயில் எண்ணெய் விட்டு சின்ன வெங்காயம் நன்கு சிவக்கும் வரை வதக்கவும். பின் கருவேப்பிலை சேர்க்கவும்.

    தற்போது வேக வைத்துள்ள காராமணியை சேர்க்கவும். அதோடு அரைத்த தேங்காய் மசாலாவை சேர்க்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்த்து , தண்ணீரும் சேர்த்துக்கொள்ளுங்கல். 3-4 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். தண்ணீர் வற்றி தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

    என்னைக்காவது மோர் குழம்பு இப்படி செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..?

    தாளிக்க கடாயில் எண்னெய் விட்டு கடுகு , காய்ந்த மிளகாய் , பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதை குழ்பில் ஊற்றி இறுதியாக கொத்தமல்லி தழை தூவி பறிமாறவும்.

    சுவையான காராமணி குழம்பு தயார்.

    பார்க்க :

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: