முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பிரியாணிக்கு வைக்கப்படும் கத்தரிக்காய் தொக்கு சைட் டிஷ்..! பெங்களூர் ஸ்டைலில் டிரை பண்ணி பாருங்க..!

பிரியாணிக்கு வைக்கப்படும் கத்தரிக்காய் தொக்கு சைட் டிஷ்..! பெங்களூர் ஸ்டைலில் டிரை பண்ணி பாருங்க..!

கத்தரிக்காய் தொக்கு

கத்தரிக்காய் தொக்கு

என்னதான் ருசியான பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள எச்சில் ஊறும் இந்த கத்தரிக்காய் தொக்குதான் அதன் கூடுதல் சுவையே...

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பிரியாணிக்கு கத்தரிக்காய் சைட் டிஷ் இல்லையெனில் அந்த உணவு முழுமைப் பெறாது. என்னதான் ருசியான பிரியாணியாக இருந்தாலும் தொட்டுக்கொள்ள எச்சில் ஊறும் இந்த கத்தரிக்காய் தொக்குதான் அதன் கூடுதல் சுவையே...எனவே அதை எப்படி வீட்டில் செய்வது என தெரிந்துகொள்ள ரெசிபியை படியுங்கள்..!

தேவையான பொருட்கள் :

கத்தரிக்காய் - 4

தக்காளி - 4

வெங்காயம் - 2

இஞ்சி பூண்டு விழுது - 1 tsp

புளி - 20 கிராம்

கடுகு - 1 tsp

மிளகு - 1 tsp

வெல்லம் - 1/2 tsp

மஞ்சள் பொடி - 1/4 tsp

மிளகாய் தூள் - 1/4 tsp

உப்பு - தே.அ

கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

முதலில் சுடு தண்ணீரில் புளியை ஊற வைத்துவிடுங்கள். பின் 1/4 கப் அளவு வருமாறு புளியை கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயம் , தக்காளி தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கத்தரிக்காயை வதக்கி தனியாக வைத்துவிடுங்கள்.

பின் அதே பாத்திரத்தில் மீண்டும் எண்ணெய் விட்டு கடுகு, மிளகு சேர்த்து தாளியுங்கள். அடுத்ததாக அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். கூடவே இஞ்சி பூண்டு விழுது சேருங்கள்.

மதிய உணவுக்கு அசத்தலாக இருக்கும் கொண்டைக்கடலை தேங்காய்பால் கிரேவி..! ரெசிபி இதோ...

நன்கு வதங்கியதும் தக்காளியை சேருங்கள். தக்காளி வதங்கி சுருங்கியதும் புளி தண்ணீரை சேர்த்து கிளறுங்கள்.மிளகாய் தூள் சேருங்கள்.

உப்பு தேவையான அளவு சேர்த்து தட்டு போட்டு மூடி 15 நிமிடங்கள் கொதிக்க விடுகள்.

15 நிமிடங்கள் கழித்து வெல்லம் சேர்த்து கலந்துவிட்டு பின் வதக்கிய கத்தரிக்காயை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கத்தரிக்காய் நன்கு வெந்து குழையுமாறு கொதிக்கவிடுங்கள்.

நன்கு கரைத்து கிரேவி பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தாழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

அவ்வளவுதான் பிரியாணிக்கு ஏற்ற கத்தரிக்காய் தொக்கு தயார்.

First published:

Tags: Biriyani, Brinjal