வீட்டில் நிறைய பொரி இருக்கா..? இப்படி ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்..!

ஆரோக்கியமான ஸ்னாக்ஸாக செய்து கொடுத்தால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ்வார்கள்.

வீட்டில் நிறைய பொரி இருக்கா..? இப்படி ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள்..!
பேல் பூரி
  • News18
  • Last Updated: October 9, 2019, 9:04 PM IST
  • Share this:
ஆயுத பூஜைக் கொண்டாட்டம் கோலாகலமாக இந்தியா முழுவதும் நடந்து முடிந்தது. அதற்காக அலுவலகம் , வீடு என அரிசி பொரியை முக்கிய படையலாக வைத்து வழிபட்டிருப்பார்கள். இதனால் வீட்டில் நிறைய பொரி தேக்கத்தில் இருக்கும். அவற்றை வைத்துக்கொண்டு என்ன செய்வதென யோசிப்போர்  ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக பேல் பூரி செய்து கொடுக்கலாம். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைத்து மகிழ்வார்கள்.

தேவையான பொருட்கள் :

பொரி - 3 கப்


ஊற வைத்த பட்டாணி - 1/2 கப்

தக்காளி - 1

வெங்காயம் - 1ஓமப் பொடி - 1/2 கப்

புதினா சட்னி - 3 ஸ்பூன்

டொமேட்டோ சாஸ் - 3 ஸ்பூன்

கேரட் - 1

வேக வைத்த உருளைக் கிழங்கு - 1

கொத்தமல்லி தழை - சிறிதளவு

எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன்

சாட் மசாலா - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவுசெய்முறை :

பொரியை பாத்திரத்தில் கொட்டிக்கொள்ளவும். அதில் வேகவைத்த பச்சை பட்டாணி, வேக வைத்த உருளைக் கிழங்கு, வெங்காயம், தக்களி, சீவிய கேரட் ஆகிவற்றை சேர்க்கவும்

அடுத்ததாக எலுமிச்சை சாறு, டொமேட்டோ சாஸ் , புதினா சட்னி, சாட் மசாலா, தேவையான உப்பு, ஓமப் பொடி மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்குக் கலந்து கொள்ளவும். ஸ்பூன் கொண்டு நன்கு கலந்துகொள்ளுங்கள்.

சுவையான பேல் பூரி தயார்.
First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading