பீட்ரூட் கோலா உருண்டை : ருசியா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்க..!

மாலையில் சுட சுட கோலா உருண்டை சாப்பிட்டுப் பாருங்கள். அசத்தலான சுவைக்கு இதோ ரெசிப்பி...

பீட்ரூட் கோலா உருண்டை : ருசியா இருக்கும் சாப்பிட்டுப் பாருங்க..!
பீட்ரூட் கோலா உருண்டை
  • Share this:
மாலையில் சுட சுட கோலா உருண்டை சாப்பிட்டுப் பாருங்கள். அசத்தலான சுவைக்கு இதோ ரெசிப்பி...

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் சீவியது - 1/3 கப்


கடலை பருப்பு - 1/2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 tsp
பச்சை மிளகாய் - 2சோம்பு -1 tsp
உப்பு - தே.அ
வெங்காயம் - 2
கொத்தமல்லி , கறிவேப்பிலை - சிறிதளவு



செய்முறை :

கடலை பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளுங்கள்.

பின் மிக்ஸியில் போட்டு அதோடு சோம்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வடைக்கு அரைப்பது போல் அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்ததும் வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்துகொள்ளுங்கள். அதோடு பீட்ரூட்டையும் சேர்த்து பிசைந்துகொள்ளவும்.

போர் அடிக்கும்போது கொறிக்க இனிப்பு சீடை : செய்முறை இதோ

தற்போது இதை வடையாகவும் தட்டிப்போடலாம் அல்லது குழிப்பணியாரம் சுடும் கல்லில் உருண்டைகளாக உருட்டி சுட்டு எடுக்கலாம்.

இட்லி குக்கரில் உருண்டைகளாக உருட்டி வேக வைத்தும் எடுக்கலாம்.

அவ்வளவுதான் பீட்ரூட் கோலா உருண்டை ரெடி.

 

 

 
First published: July 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading