ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பீட்ரூட் ஆலூ கட்லெட் : இன்னைக்கே செஞ்சு கொடுங்க...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பீட்ரூட் ஆலூ கட்லெட் : இன்னைக்கே செஞ்சு கொடுங்க...

பீட்ரூட் ஆலூ கட்லெட்

பீட்ரூட் ஆலூ கட்லெட்

இந்த ரெசிபி சுவையானது என்றாலும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பீட்ரூட் , உருளைக்கிழங்கு என சேர்த்து செய்யும் இந்த ரெசிபி சுவையானது என்றாலும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. இதில் நெய்யும் சேர்ப்பதால் பெரியவர்களுக்கு எளிதில் செரிமானமடையும். எனவே மாலையில் டீ டைமின் போது இதை ஸ்நாக்ஸாக செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் - 1 கப்

அரைத்த வேர்க்கடலை - 2 ஸ்பூன்

மிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா பொடி - 1/4 ஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

வேக வைத்த உருளைக்கிழங்கு - 1

சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்

காய்ந்த மாங்காய் பொடி - 1/2 ஸ்பூன்

தனியா பொடி - 1/2 ஸ்பூன்

கொத்தமல்லி - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

பீட்ரூட்டை அரைத்து அதன் ஜூஸை தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அதில் இப்போது வேக வைத்த உருளைக்கிழங்கை பிசைந்துகொள்ளுங்கள்.

பின் நெய் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனிஅத்து பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அனைத்தையும் நன்கு பிசைந்து கலந்துகொள்ளுங்கள்.

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்... ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு அருமையாக இருக்கும்...

இப்போது உங்கள் கைகளில் நெய் தடவிக்கொள்ளுங்கள். பின் மாவை ஒரு உருண்டையாக எடுத்துக்கொள்ளுங்கள்.

தவாவில் நெய் தடவி எடுத்த மாவு உருண்டையை தட்டையாக தட்டுங்கள். மெல்லியாதாக இருக்கக் கூடாது.

பின் இப்படி ஒவ்வொன்றாக வைத்து அவை சிவந்ததும் மறுபுறம் திருப்பி போடுங்கள்.

இருபுறமும் வெந்துவிட்டால் அவ்வளவுதான் பீட்ரூட் ஆலூ கட்லெட் தயார். இதற்கு புதினா சட்னி அல்லது தயிர் பொருத்தமாக இருக்கும்.

First published:

Tags: Chat Recipes, Cutlet, Food