முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தேங்காய் தூவலுடன் அசத்தல் வாழைக்காய் பொரியல் : எப்படி செய்வது தெரியுமா?

தேங்காய் தூவலுடன் அசத்தல் வாழைக்காய் பொரியல் : எப்படி செய்வது தெரியுமா?

வாழைக்காய் பொரியல்

வாழைக்காய் பொரியல்

தொட்டுக்கொள்ள வாழைக்காய் பொரியல் செய்து வைத்தால் வீட்டில் அனைவரும் மிச்சமில்லாமல் சுவைப்பார்கள்.

  • 1-MIN READ
  • Last Updated :

காரமான குழம்பு வகைகள் சமைக்கும் போது தொட்டுக்கொள்ள வாழைக்காய் பொரியல் செய்து வைத்தால் வீட்டில் அனைவரும் மிச்சமில்லாமல் சுவைப்பார்கள். எப்படி செய்வது என்று பார்க்கலாமா..?

தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2

மிளகாய் தூள் - 2 tsp

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

புளி - சிறிதளவு

தேங்காய் - 1 கப் (துருவியது)

கடுகு - 1/2 tsp

உளுந்து - 1/2 tsp

காய்ந்த மிளகாய் - 2

எண்ணெய் - தே. அ

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

முதலில் புளியை ஊற வைத்துக்கொள்ளுங்கள். பின் வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி கடாயில் போட்டு, அதில் புளித்தண்ணீரை கரைத்து ஊற்றுங்கள்.

பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். வாழைக்காய் சிறிது நேரத்திலேயே வெந்துவிடும் எனவே உடனே எடுத்துவிடுங்கள்.

பின் தண்ணீரை வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.  மற்றொரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து போட்டு பொறிக்க விடுங்கள்.

தினமும் தயிர் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் - ஆய்வு

அடுத்ததாக காய்ந்த மிளகாய் சேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது வேக வைத்த வாழைக்காயைப் போட்டு பிறட்டுங்கள். தண்ணீர் இறுகி வரும் வரை வதக்கிக்கொள்ளுங்கள். காயில் உப்பு சரி பார்த்துக்கொள்ளுங்கள்.

காய் சாப்பிடும் வாட்டத்திற்கு வந்ததும் தேங்காய்த் துருவலை அப்படியே தூவவும். பதமாக காயைக் கிளறி 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

அவ்வளவுதான் அட்டகாசமான வாழைக்காய் பொரியல் தயார்.

First published:

Tags: Food