நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் - எப்படி செய்வது..?

பெண்களின் கருப்பையை வலுசேர்க்க உதவும்.

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பூ துவையல் - எப்படி செய்வது..?
வாழைப்பூ துவையல்
  • Share this:
வாழைப்பூ நார்ச்சத்து நிறைந்தது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. குறிப்பாக பெண்களின் கருப்பையை வலுசேர்க்க உதவும். எனவே எப்படி இதில் துவையல் செய்து சாப்பிடுவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1


கடலைப் பருப்பு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
புளி - எலுமிச்சை அளவுகாய்ந்த மிளகாய் - 4
துருவிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 3 tsp
கடுகு - 1 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தே.அ
பெருங்காயத்தூள் - சிறிதளவு



செய்முறை :

வாழைப்பூவின் தேவையற்ற காம்புகளை நீக்கி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சமைப்பதற்கு முன் அதை மோரில் ஊற வையுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலௌப் பருப்பு, பெருங்காயத்தூள் , புளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பின் அதை ஆற வையுங்கள்.

அதே கடாயில் வாழைப்பூவையும் வதக்கிக்கொள்ளுங்கள்.

ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

முதலில் ஆற வைத்த கடலைப் பருப்பை அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து தேங்காய் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் வாழைப்பூவை சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொறிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள துவையலில் கொட்டுங்கள்.

அவ்வளவுதான் துவையல் தயார்.
First published: July 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading