முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி? - இதோ ரெசிபி

செட்டிநாடு ஸ்டைல் வாழைப்பூ கிரேவி செய்வது எப்படி? - இதோ ரெசிபி

வாழைப்பூ கிரேவி

வாழைப்பூ கிரேவி

சத்து நிறைந்த வாழைப்பூ கிரேவியை ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க.. உங்க வீட்டுல உள்ளவங்க சப்புக்கொட்டி சாப்பிடுவாங்க…

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil |

வாழையின் இல்லை, பூ, காய், தண்டு என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை. அதுமட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவை. அந்தவகையில், வாழைப்பூ மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, சிறுநீரக பிரச்சனை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும். பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை சரி செய்வதற்கு வாழைப்பூ மிகவும் பயன்படுகிறது.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் கோளாறுகள் சரியாகும். அதுமட்டும் அல்ல, வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். இப்படி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட வாழைப்பூ கொண்டு சுவையான கிரேவி ஒன்றினை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1.

சின்ன வெங்காயம் - 5.

காய்ந்த மிளகாய் - 5.

பூண்டு பல் - 5.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

சீரகம் - 1/2 ஸ்பூன்.

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி - தலா 1 கொத்து.

புளி - எலுமிச்சை பழ அளவு,

உப்பு மற்றும் எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், கிரேவி செய்ய எடுத்துக்கொண்ட வெங்காயத்தினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தொடர்ந்து, எடுத்துக்கொண்ட வாழைப்பூவினை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தயாராக தயாராக வைக்கவும்.

இதனிடையே எடுத்து வைத்துள்ள புளியை ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீருடன் சேர்த்து கரைத்து புளி கரைசல் தயார் செய்யவும். அதேநேரம், கிரேவிக்கு தேவையான மற்ற பொருட்களை தயார் செய்யவும்.

தற்போது மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில் காய்ந்த மிளகாய், பூண்டு பல், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடியாக அரைத்து, தனியே ஒரு கோப்பையில் எடுத்து வைக்கவும்.

தற்போது கிரேவி செய்ய, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

Also Read | நெஞ்சு சளி , இருமலை போக்கும் மிளகு துவையல் அரைக்க தெரியுமா..? இதோ ரெசிபி..!

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் வாழைப்பூ, உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்த மசாலா சேர்த்து 5 - 7 நிமிடத்திற்கு வதக்கவும்.

மசாலா வாசம் மாறும் நிலையில் இதில் புளி கரைசல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். அதாவது, இந்த சேர்மத்தில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.

கிரேவி நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லி தழைகளை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான வாழைப்பூ கிரேவி ரெடி.

First published:

Tags: Banana, Food, Food recipes, Health Benefits